சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று, ஒரே நாளில், 103 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதன்படி, மாநகராட்சியில், 53 பேர், சங்ககிரி, 7, ஓமலூர், 6, ஆத்தூர், நங்கவள்ளி தலா, 5, வீரபாண்டி, 4, காடையாம்பட்டி, அயோத்தியாப்பட்டணம் தலா, 3, வாழப்பாடி, 2, இடைப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி, தலைவாசல், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என, மாவட்டத்தில், 96 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதுதவிர, வேறு மாவட்டங்களில் இருந்து வந்தோரில், சென்னை, 2, நாமக்கல், கோவை, தர்மபுரி, திருச்சி, தஞ்சாவூர் தலா ஒருவர் என, 7 பேருக்கு பாதிப்பு இருந்தது. இதன்மூலம், சேலம் மாவட்டத்தில், 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
12 பேர் நியமனம்: சேலம் மாநகராட்சியில், கொரோனா விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. இதில், மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் பேசியதாவது: மாநகராட்சியில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள, 13 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. தற்போது முழுமூச்சில் மேற்கொள்ள, ஒருங்கிணைத்து கண்காணிக்க, 12 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உள்ள தெருக்களில் கண்காணிப்பு, தடுப்பூசி வழங்கும் பணி உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE