பசுவுக்கு செயற்கை கருவூட்டல்: வரும் மே 31 வரை வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பசுவுக்கு செயற்கை கருவூட்டல்: வரும் மே 31 வரை வாய்ப்பு

Added : ஏப் 09, 2021
Share
வீரபாண்டி: பசு, எருமைகளுக்கு, செயற்கை கருவூட்டல் திட்டம், மே, 31ல் நிறைவடைய உள்ளதால், கால்நடை வளர்ப்போர், அருகிலுள்ள, கால்நடை மருந்தங்களை தொடர்பு கொள்ளலாம்.நாடு முழுதும், கால்நடைத்துறை சார்பில், பசு, எருமைகள் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, பால் உற்பத்தியை பெருக்க, 2020 - 2021ல், தேசிய அளவில், இலவசமாக, செயற்கை கருவூட்டல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன், இரண்டாம் கட்ட பணி,

வீரபாண்டி: பசு, எருமைகளுக்கு, செயற்கை கருவூட்டல் திட்டம், மே, 31ல் நிறைவடைய உள்ளதால், கால்நடை வளர்ப்போர், அருகிலுள்ள, கால்நடை மருந்தங்களை தொடர்பு கொள்ளலாம்.


நாடு முழுதும், கால்நடைத்துறை சார்பில், பசு, எருமைகள் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, பால் உற்பத்தியை பெருக்க, 2020 - 2021ல், தேசிய அளவில், இலவசமாக, செயற்கை கருவூட்டல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன், இரண்டாம் கட்ட பணி, கடந்தாண்டு ஆகஸ்டில் தொடங்கி, வரும் மே, 31ல் நிறைவு பெற உள்ளது. இதனால், சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டாரத்தில் உள்ள, அனைத்து கால்நடை மருந்தகங்களில், மருத்துவர், உயர் அதிகாரிகளின் மொபைல் எண்ணுடன் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில், செயற்கை முறையில் கருவூட்டலுக்கு, வீரியமுள்ள உயர் ரக உறைவிந்து குச்சிகள் பயன்படுத்துவதால், அதிக பால் தரும் தரமான கன்று உற்பத்தியாகும். கால்நடை வளர்ப்போர், இலவசமாக, தங்கள் பசுக்களுக்கு செயற்கை கருவூட்டல் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், செயற்கை முறையில் கருவூட்டல் செய்யும்போது, ஆதார், மொபைல் எண்ணை, கட்டாயம் வழங்க வேண்டும் என கால்நடைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X