பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு பணியில் தன்னார்வலர்கள்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
இடைப்பாடி: இடைப்பாடி தாலுகா பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு, அங்குள்ள தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிய, அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று, 10க்கும் மேற்பட்டோர், தன்னார்வலராக பணிபுரிய, நேற்று வந்தனர். அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி, இடைப்பாடி தீயணைப்பு நிலைய வளாகத்தில், நேற்று நடந்தது. நகராட்சி கமிஷனர் பழனியப்பன்(பொ) தலைமை வகித்தார். அதில், நிலைய அலுவலர்

இடைப்பாடி: இடைப்பாடி தாலுகா பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு, அங்குள்ள தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிய, அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று, 10க்கும் மேற்பட்டோர், தன்னார்வலராக பணிபுரிய, நேற்று வந்தனர். அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி, இடைப்பாடி தீயணைப்பு நிலைய வளாகத்தில், நேற்று நடந்தது. நகராட்சி கமிஷனர் பழனியப்பன்(பொ) தலைமை வகித்தார். அதில், நிலைய அலுவலர் ஆறுமுகம் பேசியதாவது: தீ விபத்தில் சிக்குவோரை காக்க, அதில் ஏற்படும் இழப்புகளை தடுக்க, தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து பணிபுரிய வந்துள்ள உங்களை வரவேற்கிறேன். ஒரு வாரத்தில் அடையாள அட்டை வழங்கப்படும். முழு மனதோடு பணிபுரிந்து, தீ விபத்துகளை தடுக்கலாம். இவ்வாறு அவர் பேசினார். அதேபோல், சங்ககிரி தீயணைப்பு மீட்பு பணி நிலையம் சார்பில், நிலைய அலுவலர் அருள்மணி தலைமையில் குழுவினர், தன்னார்வ தொண்டர்களுக்கு, நேற்று, செயல்முறை பயிற்சி அளித்தனர். குறிப்பாக, மக்களை எப்படி காப்பாற்றுவது, வனம், மின் சாதனத்தால் ஏற்படும் தீ விபத்துகளை எப்படி அணைப்பது, தீயணைப்பான் இயக்குவது, தீயணைப்பு ஊர்தி மூலம் நீரை அடித்து தீயை அணைப்பது குறித்து, செயல்முறை பயிற்சி அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X