சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் விவகாரத்தில் சிறுமி கொலை?

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
வாழப்பாடி: காதல் விவகாரத்தில், மகளை, பெற்றோரே அடித்துக்கொன்றனரா என, போலீசார் விசாரிக்கின்றனர். வாழப்பாடி, கூட்டாத்துப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன், 45. இவரது மனைவி தாமரைச்செல்வி, 41. இவரது இளைய மகள் சரிதா, 16. கூட்டாத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்த இவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அவரது உடலை, பெற்றோர் எரித்துள்ளனர். இதுகுறித்து,

வாழப்பாடி: காதல் விவகாரத்தில், மகளை, பெற்றோரே அடித்துக்கொன்றனரா என, போலீசார் விசாரிக்கின்றனர். வாழப்பாடி, கூட்டாத்துப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன், 45. இவரது மனைவி தாமரைச்செல்வி, 41. இவரது இளைய மகள் சரிதா, 16. கூட்டாத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்த இவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அவரது உடலை, பெற்றோர் எரித்துள்ளனர். இதுகுறித்து, ஊர்மக்கள் தகவல்படி, காரிப்பட்டி போலீசார் விசாரித்தனர். பின், போலீசார் கூறுகையில், 'காதல் விவகாரத்தில், பெற்றோர், மகளை அடித்து, கண்டித்ததாக தகவல் கிடைத்தது. அடித்ததில் இறந்துவிட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என, விசாரிக்கிறோம். உடலை, உடனே எரித்தது, சந்தேகத்தை ஏற்படுத்துவதால், தொடர்ந்து விசாரிக்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X