சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு தகராறுக்கு பின் தாக்கியதாக புகார்: அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதிவு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
வீரபாண்டி: தேர்தல் ஓட்டுப்பதிவின்போது ஏற்பட்ட தகராறுக்கு பின், தாக்கியதாக, இரு தரப்பில் அளித்த புகார்படி, அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்துக்கு, கடந்த, 6ல், ஓட்டுப்போட வந்த மூதாட்டியை சக்கர நாற்காலியில் அழைத்து வருவதில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பு

வீரபாண்டி: தேர்தல் ஓட்டுப்பதிவின்போது ஏற்பட்ட தகராறுக்கு பின், தாக்கியதாக, இரு தரப்பில் அளித்த புகார்படி, அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்துக்கு, கடந்த, 6ல், ஓட்டுப்போட வந்த மூதாட்டியை சக்கர நாற்காலியில் அழைத்து வருவதில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பு சூழல் நிலவியது. இதனால், ஓட்டுப்பதிவு, 15 நிமிடம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அ.தி.மு.க.,வை சேர்ந்த கோவிந்தசாமி, 42, ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், நேற்று புகார் அளித்தார். அதில், 'ஏப்., 6 இரவு, 9:30 மணிக்கு, மேட்டுக்காடு, அங்கன்வாடி மையம் அருகே சென்று கொண்டிருந்தேன். அப்போது, தி.மு.க.,வை சேர்ந்த கோபி, 35, யுவராஜ், 30, சசிகுமார், 37, உள்பட சிலர், வழிமறித்து தாக்கினர். காயம் அடைந்த நான், ஆட்டையாம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அதனால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார். இதனால், கோபி, யுவராஜ், சசிகுமார் உள்ளிட்ட சிலர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். தொடர்ந்து, சசிகுமார் புகார் அளித்தார். அதில், 'ஏப்., 6 நள்ளிரவு, 12:00 மணிக்கு, அ.தி.மு.க.,வை சேர்ந்த சபரி, 35, அவரது நண்பர்கள் சுப்ரமணி, 33, பாலமுருகன், 30, உள்ளிட்ட சிலர், என் வீட்டுக்கு வந்து தகாத வார்த்தைகளில் திட்டினர். வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த, டி.வி.எஸ்., அக்ஸஸ், பஜாஜ் விகோ மொபட்டுகளை, அடித்து நொறுக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்' என கூறியிருந்தார். இதனால், சபரி, சுப்ரமணி, பாலமுருகன் உள்பட சிலர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X