சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., முன்னாள் நிர்வாகி மீது தாக்குதல்: தெற்கு மா.செ., உள்பட 20 பேர் மீது வழக்கு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
மகுடஞ்சாவடி: பா.ம.க., முன்னாள் நிர்வாகியை தாக்கியதால், அக்கட்சியின், சேலம் தெற்கு மாவட்ட செயலர் உள்பட, 20 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர்.சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, முருகன் நகரை சேர்ந்தவர் உமாபதி, 37. தறித்தொழிலாளியான இவர், சில ஆண்டுக்கு முன், பா.ம.க.,வில், தாரமங்கலம் ஒன்றிய விவசாய அணி தலைவராக செயல்பட்டு, பின் கட்சியில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். இந்நிலையில், கடந்த, 6ல்

மகுடஞ்சாவடி: பா.ம.க., முன்னாள் நிர்வாகியை தாக்கியதால், அக்கட்சியின், சேலம் தெற்கு மாவட்ட செயலர் உள்பட, 20 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர்.


சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, முருகன் நகரை சேர்ந்தவர் உமாபதி, 37. தறித்தொழிலாளியான இவர், சில ஆண்டுக்கு முன், பா.ம.க.,வில், தாரமங்கலம் ஒன்றிய விவசாய அணி தலைவராக செயல்பட்டு, பின் கட்சியில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். இந்நிலையில், கடந்த, 6ல் நடந்த தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, பா.ம.க.,வை சேர்ந்த, 20 பேர், நேற்று முன்தினம் இரவு, உமாபதி வீட்டுக்கு வந்து, அவரை தாக்கியுள்ளனர். அதில், அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரது வீட்டில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து வந்த, மகுடஞ்சாவடி போலீசார், உமாபதியை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து விசாரித்த போலீசார், பா.ம.க.,வின், சேலம் தெற்கு மாவட்ட செயலர் அண்ணாதுரை உள்பட, 20 பேர் மீது வழக்குப்பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X