வீரபாண்டி: நான்கு வழிச்சாலை பிரிவு சாலை சந்திப்பு அருகே, வேகத்தடை அமைத்தும், எச்சரிக்கை கோடுகள் வரையாததால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். சேலம் - கோவை நான்கு வழிச்சாலை, நெய்க்காரப்பட்டியில், எதிர் எதிரே பிரிவு சாலைகள் உள்ளன. அதில், மூங்கில்குத்து முனியப்பன் கோவில் செல்லும் வழியில், நான்கு மாதங்களுக்கு முன் தார்ச்சாலை போடப்பட்டது. தொடர்ந்து, நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகே, அடுத்தடுத்து இரு வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், எச்சரிக்கை கோடுகள் வரையப்படாததால், நான்கு வழிச்சாலையை கடந்து வரும் வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பது தெரியாமல் ஏறி இறங்குகின்றனர். அப்போது, தடுமாறி விழுவதோடு, சிலர் விபத்தில் சிக்கியும் காயமடைகின்றனர். இதனால், வேகத்தடைக்கு எச்சரிக்கை கோடுகள் வரைந்து, விபத்தை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE