அரூர்: வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க, வனப்பகுதியிலுள்ள குட்டைகளில், தண்ணீர் நிரப்ப வேண்டுமென, விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் உட்கோட்டத்தில், அரூர், மொரப்பூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளன. இதில், மான், முயல், காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. தற்போது, நிலவும் கடும் வெயில் மற்றும் வறட்சியால் வனப்பகுதியிலுள்ள குட்டைகள் தண்ணீரின்றி காணப்படுகின்றன. இதனால், தண்ணீர் மற்றும் தீவனம் தேடி, வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி, ஊருக்குள் வரும் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் வாகனங்களில் அடிபட்டும், கிணற்றில் விழுந்தும், நாய்களால் கடித்தும் உயிரிழக்கின்றன. எனவே, வனப்பகுதிகளிலிருந்து விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க, வனப்பகுதிகளிலுள்ள நீர்நிலைகள் மற்றும் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதுடன், விலங்குகளுக்கு தேவையான தீவனங்களையும் உற்பத்தி செய்ய வேண்டு?மென, விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம், வனப்பகுதிகளில் இருந்து, வனவிலங்குகள் வெளிவருவதை கட்டுப்படுத்தலாம் என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE