பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து அதிகரிப்பால் முருங்கை விலை சரிவு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி உழவர் சந்தைக்கு, முருங்கைக்காய் வரத்து அதிகரிப்பால், அதன் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், கத்தரி, தக்காளி, வெண்டை, முள்ளங்கி, முருங்கை உள்ளிட்ட, பல்வேறு காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த மாத முதல்வாரத்தில், முருங்கை வரத்து குறைந்து, ஒரு கிலோ, 120 முதல், 130 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில், உழவர் சந்தைக்கு

தர்மபுரி: தர்மபுரி உழவர் சந்தைக்கு, முருங்கைக்காய் வரத்து அதிகரிப்பால், அதன் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், கத்தரி, தக்காளி, வெண்டை, முள்ளங்கி, முருங்கை உள்ளிட்ட, பல்வேறு காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த மாத முதல்வாரத்தில், முருங்கை வரத்து குறைந்து, ஒரு கிலோ, 120 முதல், 130 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில், உழவர் சந்தைக்கு முருங்கை வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால், அதன் விலை படிப்படியாக சரிய துவங்கியது. அதன்படி, இம்மாத முதல்வாரத்தில், ஒரு கிலோ முருங்கைக்காய், 70 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து, நேற்று முன்தினம், 60 எனவும், நேற்று, 40 ரூபாய் எனவும், விலையில் சரிவு ஏற்பட்டது. முருங்கை வரத்து அதிகரித்து வரும் நிலையில், அதன் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனாலும், வெளிமார்க்கெட்டில் முருங்கை விலை, ஒரு கிலோ, 60 முதல், 70 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X