அரூர் டவுன் பஞ்.,ல், கிருமி நாசினி தெளிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரூர் டவுன் பஞ்.,ல், கிருமி நாசினி தெளிப்பு

Added : ஏப் 09, 2021
Share
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்.,ல், கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று நடந்தது. அரூர் டவுன் பஞ்., சார்பில், வாகனங்கள் மூலம், அரூர் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, பயணிகள் அமரும் இடம் மற்றும் பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்கள், பயணிகள் அனைவரும் சோப், கிருமிநாசினி

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்.,ல், கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று நடந்தது. அரூர் டவுன் பஞ்., சார்பில், வாகனங்கள் மூலம், அரூர் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, பயணிகள் அமரும் இடம் மற்றும் பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்கள், பயணிகள் அனைவரும் சோப், கிருமிநாசினி கொண்டு, 20 வினாடிகளுக்கு நுரை வரும் வரை கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தேவையின்றி வெளியூர் செல்வதை தவிர்க்க வேண்டும். வீடுகள், தெருக்கள் ஆகியவற்றை தூய்மையான முறையில் பராமரிக்க வேண்டும் என, டவுன் பஞ்., சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X