தீயணைப்பு துறையினர் தீ தடுப்பு ஒத்திகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு துறையினர் தீ தடுப்பு ஒத்திகை

Added : ஏப் 09, 2021
Share
தர்மபுரி: தர்மபுரி சந்தைபேட்டையிலுள்ள, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீயணைப்புத் துறையினர் கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் தீ தடுப்பு ஒத்திகை நடத்தினர்.தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத்துறையினர்

தர்மபுரி: தர்மபுரி சந்தைபேட்டையிலுள்ள, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீயணைப்புத் துறையினர் கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் தீ தடுப்பு ஒத்திகை நடத்தினர்.


தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத்துறையினர் உள்ளிட்ட துறையினர் மூலம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தர்மபுரி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்புத்துறையினர், தர்மபுரி சந்தைப்பேட்டையிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தொற்று தடுப்பு குறித்து, விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். மேலும், தீ தடுப்பு குறித்து டாக்டர்கள், செவிலியர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, காளி பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வமணி தலைமையில், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆபத்து காலங்களில் மருத்துவமனையில் வைத்துள்ள தீ தடுப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.


* கிருஷ்ணகிரி, டி.சி.ஆர்., மருத்துவமனையில், தீத்தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடந்தது. மாவட்ட அலுவலர் மகாலிங்கமூர்த்தி தலைமை வகித்தார். இதில், தீ விபத்தின்போது, தீயை அணைக்கும் விதம், நோயாளிகளை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என, மாவட்ட அலுவலர் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X