சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்து தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
பாலக்கோடு: பாலக்கோடு அருகே, சொத்தை பிரித்து தராத தந்தையின், நெஞ்சின் மீது ஏறி மிதித்து, கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, சோமனஹள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி அய்யாசாமி, 54; இவருடைய மகன் அண்ணாமலை, 33; லாரி டிரைவரான இவருக்கு, திருமணமாகி மனைவி சுமதி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தன் தந்தை பெயரிலுள்ள, 30 சென்ட் விவசாய நிலத்தை, தன்

பாலக்கோடு: பாலக்கோடு அருகே, சொத்தை பிரித்து தராத தந்தையின், நெஞ்சின் மீது ஏறி மிதித்து, கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, சோமனஹள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி அய்யாசாமி, 54; இவருடைய மகன் அண்ணாமலை, 33; லாரி டிரைவரான இவருக்கு, திருமணமாகி மனைவி சுமதி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தன் தந்தை பெயரிலுள்ள, 30 சென்ட் விவசாய நிலத்தை, தன் பெயருக்கு எழுதித்தர வெகு நாட்களாக கேட்டு வந்துள்ளார். அதற்கு, தந்தை மறுத்து வந்துள்ளார். மீண்டும் நேற்று முன்தினம், மீண்டும் சொத்தை எழுதி தரும்படி தந்தையை, அண்ணாமலை வற்புறுத்தி உள்ளார். மறுத்த தந்தையை, ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கி கீழே தள்ளி, அவரது நெஞ்சின் மீது ஏறி மிதித்துள்ளார். இதில் மயக்கமடைந்த அய்யாசாமியை, அங்கிருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். தகவலின்படி, பாலக்கோடு எஸ்.ஐ., சக்திவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சோமனஹள்ளி பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த, அண்ணாமலையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X