சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.12 லட்சம் மதிப்பு பூண்டு, உருளைக்கிழங்கு எரிந்து நாசம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
ஓசூர்: கெலமங்கலம் அருகே, அறுவடை செய்து வைத்திருந்த, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு காட்டுத்தீயில் எரிந்து நாசமானது.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே சினிகிரிப்பள்ளியில், லோகநாதன் என்பவர் தன், 10 ஏக்கர் நிலத்தில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு சாகுபடி செய்திருந்தார். இவற்றை அறுவடை செய்து, விற்பனைக்கு தன் நிலத்தின் அருகில் குடிசை

ஓசூர்: கெலமங்கலம் அருகே, அறுவடை செய்து வைத்திருந்த, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு காட்டுத்தீயில் எரிந்து நாசமானது.


கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே சினிகிரிப்பள்ளியில், லோகநாதன் என்பவர் தன், 10 ஏக்கர் நிலத்தில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு சாகுபடி செய்திருந்தார். இவற்றை அறுவடை செய்து, விற்பனைக்கு தன் நிலத்தின் அருகில் குடிசை அமைத்து அதில் வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று அவரது நிலத்தின் அருகில் ஏற்பட்ட காட்டுத்தீ, இவர் பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு வைத்திருந்த குடிசை மீது பற்றியது. இதில் உள்ளே வைத்திருந்த, 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு முற்றிலும் எரிந்து நாசமானது. தகவலின்படி வந்த தேன்கனிக்கோட்டை தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். கெலமங்கலத்தை சுற்றி அதிக வனப்பகுதி உள்ளதால், காட்டுத்தீ அடிக்கடி பற்றுகிறது. தீயை அணைக்க தேன்கனிக்கோட்டையில் இருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள், தீயில் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி விடுகிறது. எனவே, கெலமங்கலத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X