பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்டில் மயங்கி கிடந்த முதியவர் மீட்பு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ஓசூர் பஸ் ஸ்டாண்டில், மயங்கிய நிலையில் கிடந்த முதியவர் மீட்கப்பட்டு, ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஓசூர் பஸ் ஸ்டாண்ட், ஆவின் கடை அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். தூக்கத்தில் இருப்பதாக நினைத்து, யாரும் அவரை தொந்தரவு செய்யவில்லை. நேற்று காலை வரை, முதியவர் எழாததை கண்டு

கிருஷ்ணகிரி: ஓசூர் பஸ் ஸ்டாண்டில், மயங்கிய நிலையில் கிடந்த முதியவர் மீட்கப்பட்டு, ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஓசூர் பஸ் ஸ்டாண்ட், ஆவின் கடை அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். தூக்கத்தில் இருப்பதாக நினைத்து, யாரும் அவரை தொந்தரவு செய்யவில்லை. நேற்று காலை வரை, முதியவர் எழாததை கண்டு அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின்படி, 108 அவசர கால ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவரை ஓசூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை தீவிர பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு சர்க்கரை அளவு குறைந்ததால் மயக்கமடைந்துள்ளார் எனவும், உரிய சிகிச்சைக்கு பின் நலமடைந்தார் எனவும் கூறினர். விசாரணையில், முதியவர், தேன்கனிக்கோட்டை, அருள்நத்தத்தை சேர்ந்த முனிராஜ், 60, என்பது தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X