பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலை பராமரிக்க ஏரியை தானமாக வழங்கியதற்கான கல்வெட்டு கண்டுபிடிப்பு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: தட்டக்கல் அருகே, கோவிலை பராமரிக்க ஏரியை தானமாக வழங்கியதற்கான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் காவேரிப்பட்டணம் அடுத்த தட்டக்கல் மலையை ஆய்வு செய்தனர். அங்கு, கல்வெட்டுகளில் பெருமுகைப்பற்று இருப்பதை கண்டறிந்தனர். இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட, அரசு அருங்காட்சிய காப்பாட்சியர்

கிருஷ்ணகிரி: தட்டக்கல் அருகே, கோவிலை பராமரிக்க ஏரியை தானமாக வழங்கியதற்கான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் காவேரிப்பட்டணம் அடுத்த தட்டக்கல் மலையை ஆய்வு செய்தனர். அங்கு, கல்வெட்டுகளில் பெருமுகைப்பற்று இருப்பதை கண்டறிந்தனர். இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட, அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இந்த பெருமுகையில், பைரவர் கற்சிலை செய்து, சுனை ஒன்றையும் செப்பனிட்டு, இறைவனுக்கு படைக்கும் அரிசி முதலிய பொருட்களுக்காக, உதப்பிக்குட்டை என்னும் ஏரியை, மான்வேலி என்னும் ஊரை சேர்ந்த பல்லவரையனான மலையன் என்பவன், தானமளித்த செய்தியை கல்வெட்டு தெரிவிக்கிறது. இவர், செய்தளித்த பைரவர் சிற்பம், இன்றும் பைரப்பன் கோவிலில் வழிபாட்டில் உள்ளது. கல்வெட்டின் இடது மேற்புறம் பசுவும் கன்றும் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது. பெருமுகை என்ற பெயர், இப்பகுதியில் கிடைத்த, கி.பி.,8ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுக்களில் காணப்பட்டாலும், அது எந்த இடத்தை குறிக்கிறது என தெரியாமல் இருந்தது. ஆனால், 13ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கல்வெட்டில்தான் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தட்டக்கல் மலையே அக்காலத்தில் பெருமுகை என அழைக்கப்பட்டது உறுதியாகிறது. இம்மலையை வடக்கிலிருந்து பார்த்தால், ஒரு பூவின் மொட்டுபோல் இருக்கும். முகை என்பது மொட்டை குறிக்கும். பெரிய மொட்டு போன்ற மலைகளை கொண்ட காரணத்தால், அப்பகுதியானது பெருமுகை என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். ஆய்வில், வரலாற்று ஆய்வு குழுவின், நாராயணமூர்த்தி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X