கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை (ஏப்., 10), 'லோக் அதாலத்' என்ற மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
இது குறித்து, கிருஷ்ணகிரி நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள, அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களிலுள்ள அனைத்து நீதிமன்றங்களில், நாளை(ஏப்., 10), 'நேஷனல் லோக் அதாலத்' என்ற மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் கலைமதி தலைமையில் நடக்கவுள்ளது. எனவே, நிலுவையிலுள்ள சிவில், காசோலை, வங்கி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், குடும்பநல வழக்குகள், தொழிலாளர்நல வழக்குகள் மற்றும் நிலுவையிலுள்ள சில பரஸ்பரம் பேசி முடித்துக் கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அன்றைய தினமே தீர்வு வழங்கப்பட உள்ளது. எனவே, வழக்கறிஞர்களும், பொதுமக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது வழக்குகளை, மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக, சமரசமாக முடித்துக்கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE