செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 30, வெல்டிங் தொழிலாளி; இவரது மனைவி மரகதம், 26. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சீனிவாசன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். கடந்த, 6ல், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில், மரகதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடற்கூறு ஆய்வுக்கு அவரது சடலம், செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சடலத்தை பார்த்த அவரது உறவினர்கள் உடலில் பல்வேறு இடங்களில் காயம் உள்ளது. எனவே, சாவில் சந்தேகம் உள்ளது. இது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி நேற்று முன்தினம் இரவு, செய்யாறு அரசு மருத்துவமனை எதிரில் மறியலில் ஈடுபட்டனர். அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE