சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வந்தவாசியில் ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
வந்தவாசி: வந்தவாசியில், ஆட்டோ டிரைவர் ஓட, ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் நசீர்கான், 30. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் மஸ்தான், 28, என்பவருக்கும் ஆட்டோ சங்கம் அமைப்பது தொடர்பாக, தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த நவ.,21ல், நசீர்கான் ஆதரவாளர்களான தாமோதரன், தரணிதரன், ஆகிய இருவரும்,

வந்தவாசி: வந்தவாசியில், ஆட்டோ டிரைவர் ஓட, ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார்.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் நசீர்கான், 30. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் மஸ்தான், 28, என்பவருக்கும் ஆட்டோ சங்கம் அமைப்பது தொடர்பாக, தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த நவ.,21ல், நசீர்கான் ஆதரவாளர்களான தாமோதரன், தரணிதரன், ஆகிய இருவரும், மஸ்தானை கடத்தி சென்று தாக்கி, நசீர்கானிடம் தகராறில் ஈடுபடக் கூடாது என, எச்சரித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து, நசீர்கான், தாமோதரன், தரணிதரன் ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மூவரும் கடந்த ஜன., 18ல், ஜாமினில் வெளியே வந்தனர். நசீர்கான் ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு, செய்யாறு மாங்கால் கூட்ரோட்டில், சிக்கன் பகோடா கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வந்தவாசியில் உள்ள வீட்டிற்கு நசீர்கான், அவரது மனைவி சாகினா, 25, ஆகிய இருவரும் பைக்கில் சென்றனர். அப்போது, வந்தவாசி ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் தொடக்கப்பள்ளி அருகே சென்றபோது, முகமூடி அணிந்து வந்த, 10 பேர் நசீர்கானை ஓட, ஓட கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இது குறித்து, வந்தவாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X