எருமப்பட்டி: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியை சுற்றியுள்ள பொட்டிரெட்டிப்பட்டி, செவ்விந்திப்பட்டி, நடுக்கோம்பை, நத்தமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 500 ஏக்கரில் குண்டு மல்லி பயிரிடப்பட்டுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் சீசன் துவங்கி ஜூலையில் சீசன் முடிந்து விடும். தற்?போது, மல்லிகை பூ வரத்து அதிகரித்துள்ளது. சாதாரண மாதங்களில், 200 கிலோ வரை மட்டுமே பூக்கும் இந்த குண்டு மல்லிப் பூக்கள், கடந்த ஒரு வாரமாக, சீசன் துவங்கியதால் இந்த பகுதியில் இருந்து மட்டும், 10 ஆயிரம் கிலோ வரை விவசாயிகளிடம் இருந்து வாங்கி, பல்வேறு மாவட்டங்களுக்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். மேலும், இந்த பகுதியில் திருவிழா காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில், கிலோ குண்டு மல்லி, 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். தற்போது சீசன் துவங்கி அதிகளவில் பூக்கள் வரத்து இருப்பதாலும் பங்குனி, சித்திரை மாதங்களில் விசேஷ நாட்கள் இல்லாததாலும், 150 முதல், 200 ரூபாய் வரை விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE