பொது செய்தி

தமிழ்நாடு

'மூவருக்கு மேல் பாதிப்பிருந்தால் அப்பகுதிகள் அடைக்கப்படும்'

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: ''மூன்று பேருக்கு மேல் கொரோனா பாதிப்பிருந்தால், அப்பகுதி அடைக்கப்படும்,'' என, குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: குமாரபாளையம் நகராட்சியில், ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் மூன்று பேர் தனியார் மருத்துவமனையிலும், இரண்டு பேர் குமாரபாளையம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை

குமாரபாளையம்: ''மூன்று பேருக்கு மேல் கொரோனா பாதிப்பிருந்தால், அப்பகுதி அடைக்கப்படும்,'' என, குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: குமாரபாளையம் நகராட்சியில், ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் மூன்று பேர் தனியார் மருத்துவமனையிலும், இரண்டு பேர் குமாரபாளையம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர். அனைத்து பகுதியிலும் பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு வழிகாட்டுதல் பேரில் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்படும். 15 நாட்களுக்கு முன்னதாகவே அனைத்து பகுதியிலும் தீவிர பிரசாரம் செய்யப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. முக கவசம் இல்லாமல் வெளியில் வருவோர், கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மூன்று பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு நபர்கள் உள்ள பகுதி அடைக்கப்படும் இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X