பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் உச்சத்தில் கொரோனா; ஒரேநாளில் 1.31 லட்சம் பேர் பாதிப்பு

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.31 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்தது.ஒரே நாளில் 61 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 19 லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியது. 9.79 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,67,642 பேர்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.31 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்தது.

ஒரே நாளில் 61 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 19 லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியது. 9.79 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,67,642 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news


இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 91.22 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.28 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 7.50 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி


latest tamil news




சோதனைகள்

இந்தியாவில் நேற்று (ஏப்ரல் 8) ஒரே நாளில் 13,64,205 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 25 கோடியே 40 லட்சத்து 41 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news




உலக பாதிப்பு


இன்று (ஏப்ரல் 9-ம் தேதி) காலை 10:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 13 கோடியே 45 லட்சத்து 28 ஆயிரத்து 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 லட்சத்து 15 ஆயிரத்து 012 பேர் பலியாகினர். 10 கோடியே 83 லட்சத்து 30 ஆயிரத்து 435 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
09-ஏப்-202117:49:00 IST Report Abuse
g.s,rajan கொரோனாவை வைத்து பாதி பித்தலாட்டம் தான் நிறைவேறியது ,பல மக்களின் வாழ்வாதாரம் தொலைந்து போய்விட்டது .கொரோனாவினால் கோடி கோடியாக கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழித்து விட்டன ,பல கோடிக்கணக்கில் வாங்கிய கடன் அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது .இதில் நொந்து நூலானது நடுத்தரக் குடும்பங்கள்தான் ,மாதச் சம்பளக்காரர்கள்தான் சாமானிய மக்கள்தான் .பல தொழில் நிறுவனங்களில் ஊதிய உயர்வு ,பதவி ஏற்றங்கள் மிகவும் தடை பட்டன ,இதனால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வு தொலைந்து போனது .ஊதிய உயர்வில் மண் விழுந்தது .பல தொழில்களில் விற்கும் பொருட்களில் விலையை உயர்த்தி மேலும் கொள்ளை லாபம் கொரோனா காலத்தில் அடித்தது வேதனையிலும் வேதனை , கொரானாவைக் காரணம் காமிச்சு பெட்ரோல் டீசல் விலையை தாறுமாறா உசத்தி சாதாரண மக்களை வாட்டி வதைக்கிறாங்க கொரானாவைக் காரணம் காட்டி இன்னும் ரயிலை விடாம மக்களை போட்டுக் கொல்றாங்க... ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
09-ஏப்-202112:17:03 IST Report Abuse
ஆப்பு தேர்தல் திருவிழா இல்லை... கொரோனா பரப்புதல் திருவிழா நடத்தி முடிச்சிருக்காங்க.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
09-ஏப்-202111:22:38 IST Report Abuse
oce குரோனா மனித ரத்த வாடையை சுவைத்து பெருகுகிறது. குரோனா வெய்யில் காலத்தில் அதிகமாக் பரவுகிறது. என்ன காரணம். வெப்பத்தில் மனித உடலில் இருந்து வெளியேறும் ரத்தவாடையுடன் கூடிய உப்புகரித்த வியர்வை நாற்றத்தை ஸ்மெல் பண்ணி வலுவடைந்து பரவுகிறது. தடுப்பூசி மாஸ்க் கைகளில் மருந்து தெளித்தல் என எவையும் குரோனாவை கட்டுப்படுத்த இயலாத காலம். சென்ற ஆண்டும் இப்படி வெய்யிலில் அதிகமாக பரவியது. தடுப்பு மருந்திடப்பட்ட கனமான மேல் ஆடைகளை அணிந்து வெளியே சென்றால் குரோனா மனிதரை நெருங்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X