கோவில் தெப்பக்குளத்தில் ஊற்று தண்ணீரால் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் தெப்பக்குளத்தில் ஊற்று தண்ணீரால் மகிழ்ச்சி

Added : ஏப் 09, 2021
Share
ராசிபுரம்: ராசிபுரத்தில், சிவன் கோவில் தெப்பக்குளத்தில் ஊற்று தண்ணீர் வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ராசிபுரம் நகராட்சி அலுவலகம் அருகே, சிவன் கோவில் தெப்பக்குளம் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன், இந்த குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும். இப்பகுதி மக்களின் நீராதாரமாகவும் விளங்கியது. நாளடைவில் மழை குறைந்து குளத்தில் தண்ணீர் குறைந்தது. தொடர்ந்து, குப்பை தொட்டியாக

ராசிபுரம்: ராசிபுரத்தில், சிவன் கோவில் தெப்பக்குளத்தில் ஊற்று தண்ணீர் வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ராசிபுரம் நகராட்சி அலுவலகம் அருகே, சிவன் கோவில் தெப்பக்குளம் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன், இந்த குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும். இப்பகுதி மக்களின் நீராதாரமாகவும் விளங்கியது. நாளடைவில் மழை குறைந்து குளத்தில் தண்ணீர் குறைந்தது. தொடர்ந்து, குப்பை தொட்டியாக மாறியது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. தெப்பக்குளத்தை தூர் வாரினால், குப்பை சுத்தமாவதுடன், மழைக்காலத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டியாகவும் பயன்படுத்தலாம் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு சிவனடியார்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து கமிஷனர் பிரபாகரன் தெப்பக்குளத்தை தூர் வார உத்தரவிட்டார். கடந்த மாதம் நகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அதன் பிறகு, தூர்வாரும் பணி தொடங்கியது. சிவனடியார்கள் பங்கேற்றனர். கொட்டியுள்ள மண்ணை பொக்லைன் மூலம் கடந்த சில தினங்களாக அகற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை மண்ணை அள்ளியபோது, ஊற்று நீர் பீறிட்டு வந்தது. இதனால், சிவனடியார்கள், பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X