மோகனூர்: கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் சுவாமி கோவில், ஹயக்ரீவர் லட்சார்ச்சனை துவங்கி உள்ளது.
மோகனூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், லட்சுமி ஹயக்ரீவர் லட்சார்ச்சனை பெருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும், மாணவ, மாணவியர் கல்வியில் வெற்றியடைவும், தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையவும், இயற்கை சீற்றங்கள் தணியவும், பருவமழை காலத்தே பொழிந்து நதி நீர் வளம் பெற்று விவசாயம் மேன்மை அடையவும், உலக நன்மைக்காகவும், லட்சுமி ஹயக்ரீவர் லட்சார்ச்சனை பெருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. தினமும் காலை, 8:30 மணிக்கு, அபி ?ஷகம், லட்சார்ச்சனை, மேதா ஹயக்ரீவர், மேதா சரஸ்வதி வித்யா ஞான பலப்ரத மகா மந்திரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி, மாலை, 4:30 மணிக்கு, லட்சார்ச்சனை, இரவு, 8:00 மணிக்கு, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 11 காலை, 7:00 மணிக்கு, புன்யாக வாசனம், ?ஹாம சங்கல்பம், லட்சார்ச்சனை நிறைவு, ஹயக்ரீவர் சிறப்பு திருமஞ்சனம், பிரசாதம், அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, ஹயக்ரீவர் உற்சவமூர்த்தி, திருக்கோவில் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருச்சுற்று எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தொடர்ந்து, புஷ்பாஞ்சலி, கூட்டு பிராத்தனை, தீபாராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் கலைவாணி, உதவி ஆணையர் ரமேஷ், நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE