மதுரையில் ஒரே நாளில் 18 தெருக்களுக்கு சீல்: மீண்டும் தாண்டவமாடும் கொரோனா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் ஒரே நாளில் 18 தெருக்களுக்கு 'சீல்': மீண்டும் தாண்டவமாடும் கொரோனா

Added : ஏப் 09, 2021
Share
மதுரை: மதுரையில் கொரோனா பரவல் அதிகமுள்ள 18 தெருக்களுக்கு நேற்று மாநகராட்சி நிர்வாகம் 'சீல்' வைத்தது. இங்கிருந்து மக்கள் வெளியில் செல்லவும், வெளிநபர்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் கொரோனா 2ம் அலை தீவிரமடைந்துள்ளது. தினசரி பாதிப்பு 100 தாண்டிவிட்டது. மருத்துவமனை படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன. நேற்று ஒரே நாளில் 115 பேரை வைரஸ் தாக்கியது.
 மதுரையில் ஒரே நாளில்  18 தெருக்களுக்கு 'சீல்':  மீண்டும் தாண்டவமாடும்  கொரோனா

மதுரை: மதுரையில் கொரோனா பரவல் அதிகமுள்ள 18 தெருக்களுக்கு நேற்று மாநகராட்சி நிர்வாகம் 'சீல்' வைத்தது. இங்கிருந்து மக்கள் வெளியில் செல்லவும், வெளிநபர்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கொரோனா 2ம் அலை தீவிரமடைந்துள்ளது. தினசரி பாதிப்பு 100 தாண்டிவிட்டது. மருத்துவமனை படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன. நேற்று ஒரே நாளில் 115 பேரை வைரஸ் தாக்கியது. குறிப்பாக நகர் பகுதியில் தான் கொரோனா பரவல் அதிகமுள்ளது. இதனால் புதிய கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் விதிக்க துவங்கியுள்ளது. ஒரு தெருவில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பாதிப்பு இருந்தால், அத்தெருவை மூடி சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக வில்லாபுரம் டி.என்.எச்.பி., காலனி, நேருநகர் ராமகிருஷ்ணா கிராஸ் தெரு, கே.கே.நகர் மகாத்மா பள்ளி மெயின் ரோடு, சம்மட்டிபுரம் நேதாஜி மெயின் தெரு, தெற்குவாசல் ஆறுமுக ஆசாரி தெரு, திருப்பாலை இந்திரா தெரு, கே.கே.நகர் துணை கலெக்டர் 6வது தெரு உட்பட 18 தெருக்கள் நேற்று ஒரே நாளில் மூடப்பட்டன.தெருக்களின் இருபுறமும் தகரத்தால் அடைக்கப்பட்டுள்ளன. வெளிநபர்களுக்கு அனுமதி கிடையாது. இங்கிருந்து வெளியில் செல்லவும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை தெருவிற்குள்ளே விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர பாதிப்பு காரணமாக சில நிறுவனங்களுக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X