நாமக்கல் அரசு மருத்துவமனையில் காத்திருப்பு அறை அமைக்கப்படுமா?

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பார்வையாளர்கள் காத்திருப்பு அறை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.நாமக்கல்-மோகனூர் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு, நாமக்கல் மட்டுமல்லாமல் திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மத்திய அரசின் தரச்சான்று பெற்ற மருத்துவமனையான

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பார்வையாளர்கள் காத்திருப்பு அறை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.


நாமக்கல்-மோகனூர் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு, நாமக்கல் மட்டுமல்லாமல் திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மத்திய அரசின் தரச்சான்று பெற்ற மருத்துவமனையான இங்கு, பல்வேறு சிகிச்சை பிரிவுகள் உள்ளன. மருத்துவமனையின் பின் பகுதியில் மகப்பேறு சிகிச்சை மையம் அமைந்துள்ளது. அந்த வார்டுக்கு தினமும், 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பெண்களுக்கு பிரசவம் நடந்ததும் அவர்கள் உடனிருக்க ஒருவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்ததும் அப்பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் வந்து தாயையும், சேயையும் பார்த்துச் செல்வது வழக்கம். அவ்வாறு வந்து போகும் வெளி நபர்களை வார்டுக்கு அனுப்பி வைக்காமல் நீண்டநேரம் காக்க வைக்கப்படுகின்றனர். மேலும், அங்கு போதிய காத்திருப்போர் அறை மற்றும் இருக்கைகள் இல்லாததால் பார்வையாளர்கள் தரையில் அமர்ந்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 'பார்வையாளர்கள் காத்திருப்பு அறை அமைக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X