பொது செய்தி

தமிழ்நாடு

முககவசம் அணிவதில் அலட்சியம்; கொரோனா பரவும் அபாயம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
கரூர்: முக கவசம் அணிய, அலட்சியம் செய்பவர்கள் மீது நடவடிக்கை தேவை என, பொது நல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம் முழுதும், கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது, இரட்டை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு

கரூர்: முக கவசம் அணிய, அலட்சியம் செய்பவர்கள் மீது நடவடிக்கை தேவை என, பொது நல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம் முழுதும், கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது, இரட்டை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கூட்டங்கள், பிரசாரங்கள் நடந்தன. இதிலும், ஆயிரக்கணக்கானோர், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் கலந்து கொண்டனர். மேலும், 90 சதவீத மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் சென்று வருகின்றனர். இதனால், மேலும், பரவல் அதிகமாக வாய்ப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி, அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்பதை கட்டாயப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X