கரூர்: புழுக்களுடன் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக, அன்சாரி தெருவில் உள்ள பெண்கள், காலி குடங்களுடன் வந்து, கரூர் நகராட்சி ஆணையர் சுதாவிடம் மனு அளித்தனர். அதில், கூறியிருப்பதாவது: கரூர் நகராட்சிக்குட்பட்ட அன்சாரி தெருவில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில், ஆறு மாதங்களாக காவிரி குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. அப்படி வந்த குடிநீரிலும், மணல் கலந்து நிறம் மாறி, புழுக்களுடன் காணப்படுகிறது. இதனால், முதியவர்கள், குழந்தைகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பகுதியில், பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. பணி தொடங்கியது முதல், குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரம் சென்று, தண்ணீர் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறோம். மேலும், சாக்கடை கால்வாய்களில் கழிவுநீர் நிரம்பி உள்ளது. இதில், குழந்தைகள் விழுந்து விடுமோ என்று அச்சம் உள்ளது. இரண்டாவது முறையாக மனு கொடுத்து இருக்கிறோம். இது குறித்து நடவடிக்கை இல்லையெனில், சாலை மறியலில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE