கரூர்: கரூர் மாவட்டத்தில், முலாம் பழம் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. கரூர் ஆசாத் ரோடு, வெண்ணைமலை, ஜவஹர் பஜார், லைட்ஹவுஸ் கார்னர், வடக்கு பிரதட்சணம் சாலை உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் முலாம் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கொண்டு இருந்து வரவழைக்கப்பட்ட, முலாம் பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கோடை வெயிலை சமாளிக்கும் வகையிலும், மருத்துவ குணம் வாய்ந்த வகையிலும் உள்ள இந்த பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஆந்திரா மாநிலம், கடப்பாவில் இருந்து முலாம்பழங்கள் வரத்தாகின்றன. குளித்தலை, கிருஷ்ணராயபுரம் உட்பட மாவட்டம் முழுவதும் முலாம் பழம் விற்பனை அதிகரித்துள்ளது. முலாம் பழம்ஒரு கிலோ, 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோடை காலம் முழுவதும் பழங்களின் விற்பனை, கரூரில் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE