சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காணாமல் போன வியாபாரி: கிணற்றில் சடலமாக மீட்பு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
குளித்தலை: தொண்டமாங்கிணம் பகுதி யில், காணாமல் போன மர வியாபாரி, கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.குளித்தலை அடுத்த, தொண்டமாங்கிணம் பஞ்., வரகூரில், ஜக்கம்மாள் கோவில் மாடு மாலை தாண்டும் விழா நடந்தது. அப்போது, கோவில் அருகே இருந்த பாழடைந்த, 100 அடி ஆழம் உள்ள கிணற்றில் இருந்து, நேற்று மாலை, 4:00 மணியளவில் துர்நாற்றம் வீசியது. அங்கிருந்தவர்கள் கிணற்றை பார்த்த போது, அதில் வாலிபர்

குளித்தலை: தொண்டமாங்கிணம் பகுதி யில், காணாமல் போன மர வியாபாரி, கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.


குளித்தலை அடுத்த, தொண்டமாங்கிணம் பஞ்., வரகூரில், ஜக்கம்மாள் கோவில் மாடு மாலை தாண்டும் விழா நடந்தது. அப்போது, கோவில் அருகே இருந்த பாழடைந்த, 100 அடி ஆழம் உள்ள கிணற்றில் இருந்து, நேற்று மாலை, 4:00 மணியளவில் துர்நாற்றம் வீசியது. அங்கிருந்தவர்கள் கிணற்றை பார்த்த போது, அதில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்ததை கண்டு, தோகைமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். மணப்பாறை தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இருந்த, வாலிபரின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தது பாப்பக்காபட்டி பஞ்., தாசில்நாயக்கனூரை சேர்ந்த மர வியாபாரி முத்துவேல், 38, என, தெரியவந்தது. இவர் கடந்த, 6ல் இரவு வரகூர் திருவிழாவில் நடந்த நாடகத்திற்கு, தனது நண்பர் சிவாஜியுடன் வந்துள்ளார். அன்று இரவு நாடகத்தை இருவரும் பார்த்துள்ளனர். இதில் இருவரும் தூங்கியதாக தெரிகிறது. பின்னர் சிவாஜி எழுந்து பார்த்தபோது முத்துவேலை காணவில்லை. பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்த நிலையில், கிணற்றில் முத்துவேல் பிணமாக மீட்கப்பட்டுள்ளது தெரியவந்தது. முத்துவேல் இறப்பில் சந்தேகம் உள்ளதாக, தோகைமலை போலீசில் உறவினர்கள் புகாரளித்தனர். முத்துவேல் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது மர்ம நபர்களால் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துவேலுக்கு சத்யா, 30, சங்கீதா, 28, என இரு மனைவியர், மூன்று மகள்கள், இரு மகன்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X