குடிநீர் திட்ட பைப் லைன் விரிசலால் வீணாகும் குடிநீர்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், காவிரி கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன் விரிசல் ஏற்பட்டதால், ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.அரவக்குறிச்சி, தாராபுரம் சாலையில் மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து தாராபுரம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கோவை, ஈரோடு போன்ற பகுதி களுக்கு கனரக வாகனங்கள், பஸ்கள் சென்று வருகின்றன. இந்நிலையில்,

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், காவிரி கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன் விரிசல் ஏற்பட்டதால், ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.


அரவக்குறிச்சி, தாராபுரம் சாலையில் மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து தாராபுரம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கோவை, ஈரோடு போன்ற பகுதி களுக்கு கனரக வாகனங்கள், பஸ்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், சாலையோரத்தில் பதிக்கப்பட்டுள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்ட பைப்லைனில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு மேலாக, தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. அப்பகுதியில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே, காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், தற்போது மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் பலனில்லை. எனவே, பழுதடைந்த காவிரி கூட்டு குடிநீர் பைப் லைனை சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X