கடலுார் :அரசு விரைவு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் மூவர் இறந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.நாகப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு விரைவு பஸ் சென்னைக்கு புறப்பட்டது. பஸ்சை சிவக்குமார் 48; ஓட்டினார்.நேற்று அதிகாலை 2:00 மணியளவில் கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் மேட்டுப்பாளையம் வளைவு அருகே வந்தது. அப்போது கடலுாரில் இருந்து சிதம்பரத்திற்கு மீன் ஏற்றி சென்ற லாரி பஸ் மீது மோதியது. லாரி மோதிய வேகத்தில் பஸ் கவிழ்ந்தது.இந்த விபத்தில் பஸ் டிரைவர் சிவக்குமார் பஸ் பயணியர் தரங்கம்பாடி அடுத்த நல்லாடையைச் சேர்ந்த அன்பரசன் 37, நாகப்பட்டினத்தை சேர்ந்த வைரவன் 19, ஆகிய மூவரும் இறந்தனர்.லாரி டிரைவர் பஸ் கண்டக்டர் உட்பட 40 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிதம்பரம் கடலுார் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார்விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE