பொது செய்தி

தமிழ்நாடு

பிற மாநிலத்துக்கு துணி அனுப்புவது நிறுத்தம்: ஊரடங்கு அறிவிக்க வாய்ப்புள்ளதாக சந்தேகம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
ஈரோடு: கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்ற சந்தேகத்தால், ஈரோட்டில் இருந்து, பிற மாநிலங்களுக்கு துணிகளை அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.ஈரோடு பகுதியில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சாதா துணி, ரயான் துணி, தினமும் ஏழு கோடி ரூபாய் மதிப்பில், 24 லட்சம் மீட்டர் உற்பத்தியாகிறது. மஹாராஷ்டிரா, குஜராத், டில்லி, மேற்குவங்கம் உட்பட பிற மாநிலங்களுக்கு காடா துணியாக,

ஈரோடு: கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்ற சந்தேகத்தால், ஈரோட்டில் இருந்து, பிற மாநிலங்களுக்கு துணிகளை அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.


ஈரோடு பகுதியில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சாதா துணி, ரயான் துணி, தினமும் ஏழு கோடி ரூபாய் மதிப்பில், 24 லட்சம் மீட்டர் உற்பத்தியாகிறது. மஹாராஷ்டிரா, குஜராத், டில்லி, மேற்குவங்கம் உட்பட பிற மாநிலங்களுக்கு காடா துணியாக, மதிப்பு கூட்டப்பட்ட துணியாக மாற்றி பெறவும் அனுப்புவர். இரண்டு மாதமாக வட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. குறிப்பாக மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில், இரவில் முழு ஊரடங்கு, பகலில் பல்வேறு கட்டுப்பாடு உள்ளதால், ஜவுளி தொடர்பான பணி பாதித்துள்ளது. இதனால் அங்கிருந்து ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைக்காமலும், இங்கிருந்து துணிகளை அனுப்ப முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் கூறியதாவது: வடமாநிலங்களில் கொரோனா ஊரடங்கு விதித்து, ஜவுளி விற்பனை, மதிப்புக்கூட்டப்பட்ட பணிகள் பாதித்துள்ளன. இதனால் அங்கிருந்து பத்து நாட்களாக புதிய ஆர்டர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிக்கு வழங்கவில்லை. இங்கிருந்து துணியை அனுப்பினால், பணம் பெறுவதிலும், மதிப்புக்கூட்டப்பட்ட துணியாக மாற்றி திரும்ப வாங்கும் அளவு அவகாசம் உள்ளதா என தெரியவில்லை. இதனால், துணி அனுப்புவதை ஒரு வாரமாக நிறுத்தி வைத்துள்ளோம். அரசு அறிவிக்கும் ஊரடங்கு தளர்வுகளுக்கு ஏற்ப, அடுத்த கட்ட உற்பத்தி நிலை இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X