ஓட்டுச்சாவடிக்கு இழுக்கும் வைட்டமின் ப: கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து சீரான ஓட்டுப்பதிவு| Dinamalar

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடிக்கு இழுக்கும் வைட்டமின் 'ப': கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து சீரான ஓட்டுப்பதிவு

Added : ஏப் 09, 2021
Share
கரூர்: தொடர்ந்து பல தேர்தல்களாக, பணம் பட்டுவாடா நடப்பதால், கரூர் மாவட்டத்தில் தற்போது, 83.96 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு, ஏப்.,6ல் முடிவடைந்தது. இதில், கரூர் மாவட்டம் ஓட்டுப்பதிவு சதவீதத்தில், தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. அரவக்குறிச்சியில், 83 ஆயிரத்து, 509 ஆண்கள், 91 ஆயிரத்து, 757 பெண்கள் என மொத்தம், ஒரு லட்சத்து, 75 ஆயிரத்து, 266 பேர்

கரூர்: தொடர்ந்து பல தேர்தல்களாக, பணம் பட்டுவாடா நடப்பதால், கரூர் மாவட்டத்தில் தற்போது, 83.96 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.


தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு, ஏப்.,6ல் முடிவடைந்தது. இதில், கரூர் மாவட்டம் ஓட்டுப்பதிவு சதவீதத்தில், தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. அரவக்குறிச்சியில், 83 ஆயிரத்து, 509 ஆண்கள், 91 ஆயிரத்து, 757 பெண்கள் என மொத்தம், ஒரு லட்சத்து, 75 ஆயிரத்து, 266 பேர் வாக்களித்துள்ளனர். இது, 81.92 சதவீதம். கரூரில், 99 ஆயிரத்து, 149 ஆண்கள், ஒரு லட்சத்து, 57 ஆயிரத்து, 742 பெண்கள் என, மொத்தம், இரண்டு லட்சத்து, 49 ஆயிரத்து, 3 பேர் வாக்களித்துள்ளனர். இது, 83.54 சதவீதம். கிருஷ்ணராயபுரத்தில், 88 ஆயிரத்து, 777 ஆண்கள், 90 ஆயிரத்து, 452 பெண்கள் என, மொத்தம், இரண்டு லட்சத்து, 49 ஆயிரத்து, 231 பேர் வாக்களித்துள்ளனர். இது, 84.17 சதவீதம். குளித்தலையில், 95 ஆயிரத்து, 954 ஆண்கள், 99 ஆயிரத்து, 679 பெண்கள் என மொத்தம், ஒரு லட்சத்து, 95 ஆயிரத்து, 634 பேர் வாக்களித்துள்ளனர். இது, 86.16 சதவீதம். மாவட்டத்தில் மொத்தம், மூன்று லட்சத்து, 67 ஆயிரத்து, 389 ஆண்கள், மூன்று லட்சத்து, 87 ஆயிரத்து, 630 பெண்கள் என மொத்தம், ஏழு லட்சத்து, 55 ஆயிரத்து, 34 பேர் வாக்களித்துள்ளனர். இது, 83.96 சதவீதம்.

கடந்த, 2006ல், அ.தி.மு.க.,வில் செந்திபாலாஜி, தி.மு.க.,வில் வாசுகியும் போட்டியிட்டனர். அன்று முதல் பணம் பட்டுவாடா கலாசாரம் தொடங்கியது. 2011ல், பணம் பலமிக்க, தி.மு.க., கே.சி. பழனிசாமி போட்டியிட்ட போது, ஓட்டுக்கு, 1,000 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டது. தற்போது நான்கு தொகுதிகளில், பணம் பட்டுவாடா தான் வெற்றியை நிர்ணயம் செய்கிறது என, வேட்பாளர்கள் நினைக்க தொடங்கி விட்டனர். இந்த தேர்தலில், அ.திமு.க., சார்பில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், தி.மு.க., சார்பில், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜியும் போட்டியிட்டனர். கரூர் தொகுதியில், இரு கட்சிகள் சார்பில், 2,000 முதல், 3,000 ரூபாய் மற்றும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற தொகுதிகளில், 500 முதல், 1,000 ரூபாய் வரை பணம் வினியோகம் இருந்தது. ஓட்டுச்சாவடிக்கு, வாக்காளர்களை இழுத்து வருவது, வைட்டமின் 'ப' வாக உள்ளது. ஓட்டுப்போட விருப்பமின்றி இருக்கும் வாக்காளர்களை கூட, பணம் கொடுத்து கட்சி நிர்வாகிகள், அழைத்து வந்து ஓட்டளிக்க செய்கின்றனர். இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில், 2011ல், 86.06 சதவீதம், 2016ல் 83.06 சதவீதம் (அரவக்குறிச்சி நீங்கலாக), 2021ல், 83.96 சதவீதம் என அதிகளவில் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X