பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் மண்டலத்துக்கு 5ம் கட்டமாக 1.28 லட்சம் கொரோனா தடுப்பூசி

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மண்டலத்துக்கு, 5ம் கட்டமாக, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள், ஒரு லட்சத்து, 28 ஆயிரத்து, 300 வழங்கப்பட்டுள்ளன.?சேலம் மாவட்டத்தில், கடந்த ஜன., 16 முதல், கொரோனா பாதிப்பை தடுக்க, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. குறிப்பாக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சில தனியார் மருத்துவமனைகள், 'மினி கிளினிக்'குகள் மூலம், தடுப்பூசி

சேலம்: சேலம் மண்டலத்துக்கு, 5ம் கட்டமாக, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள், ஒரு லட்சத்து, 28 ஆயிரத்து, 300 வழங்கப்பட்டுள்ளன.


?சேலம் மாவட்டத்தில், கடந்த ஜன., 16 முதல், கொரோனா பாதிப்பை தடுக்க, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. குறிப்பாக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சில தனியார் மருத்துவமனைகள், 'மினி கிளினிக்'குகள் மூலம், தடுப்பூசி போடப்படுகின்றன. கொரோனா, மீண்டும் பரவ தொடங்கியுள்ளதால், தடுப்பூசி போட்டுக் கொள்ள, மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், சேலம் மண்டலத்துக்கு, 5ம் கட்டமாக தடுப்பூசிகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, சேலம் சுகாதார மாவட்டத்துக்கு, 29 ஆயிரத்து, 100; ஆத்தூர் சுகாதார மாவட்டத்துக்கு, 18 ஆயிரத்து, 100; நாமக்கல் மாவட்டத்துக்கு, 12 ஆயிரத்து, 600; கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, 8,700; தர்மபுரி மாவட்டத்துக்கு, 5,300; சேலம் மாவட்டத்தில், இருப்பில் வைத்துக்கொள்ள, 30 ஆயிரம் என, ஒரு லட்சத்து, 3,800 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், சேலத்துக்கு, 15 ஆயிரம், தர்மபுரிக்கு, 2,000, கிருஷ்ணகிரிக்கு, 3,000, நாமக்கல்லுக்கு, 4,500 என, 24 ஆயிரத்து, 500 கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இந்த தடுப்பூசிகள், சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, அந்தந்த மாவட்டங்களுக்கு, கடந்த இரு நாளாக அனுப்பி வைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X