பொது செய்தி

தமிழ்நாடு

துரைமுருகனுக்கு கொரோனா தொற்று

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
வேலூர்: கொரோனா தொற்றால், தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் பாதிக்கப்பட்டதால், சென்னையிலுள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார். இதற்காக, காட்பாடி காந்திநகரிலுள்ள அவரது வீட்டில் தங்கி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று முன்தினம், சென்னை

வேலூர்: கொரோனா தொற்றால், தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் பாதிக்கப்பட்டதால், சென்னையிலுள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.


வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார். இதற்காக, காட்பாடி காந்திநகரிலுள்ள அவரது வீட்டில் தங்கி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று முன்தினம், சென்னை சென்ற அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில், நேற்று அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அவர், சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். ஏற்கனவே அவர், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, காட்பாடி காந்திநகரிலுள்ள அவரது வீடு மற்றும் அப்பகுதி முழுவதும் நேற்று சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அவரது தம்பி துரைசிங்காரம், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்.பி., அவரது மனைவி சங்கீதா, வீட்டின் பணியாளர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடந்தது. கடந்த, 10 நாட்களில் துரைமுருகனோடு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள், அவர் பிரசார கூட்டங்களில் பங்கேற்றோருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள, அவர்கள் பட்டியலை சுகாதாரத்துறையினர் தயாரித்து வருகின்றனர். பெரும்பாலான கூட்டங்களில், முகக்கவம் அணியாமல், துரைமுருகன் பேசியால், கொரோனா பரவியதாக சுகாதாரத்துறையினர் கூறினர்.


* ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜிக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், வேலூர், சி.எம்.சி., மருத்துவமனையில், நேற்று அவர் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X