எம்.ஜி.ஆர்.,-ஜெயலலிதா சிலைகளுக்கு தடை கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்.,-ஜெயலலிதா சிலைகளுக்கு தடை கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஏப் 09, 2021
Share
மதுரை: திருச்சி மாவட்டம் மணச்சநல்லுார் அருகே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை நிறுவ தடை கோரிய வழக்கில், கலெக்டர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மணச்சநல்லுார் அருகே மணியாங்குறிச்சி தி.மு.க., உறுப்பினர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த பொது நல மனு:மணியாங்குறிச்சியில் 13 அடி ரோடு உள்ளது. இது மிகக்குறுகியது. திருச்சி- பெரம்பலுார் மெயின் ரோட்டை இணைக்கிறது. மறைந்த


மதுரை: திருச்சி மாவட்டம் மணச்சநல்லுார் அருகே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை நிறுவ தடை கோரிய வழக்கில், கலெக்டர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மணச்சநல்லுார் அருகே மணியாங்குறிச்சி தி.மு.க., உறுப்பினர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த பொது நல மனு:மணியாங்குறிச்சியில் 13 அடி ரோடு உள்ளது. இது மிகக்குறுகியது. திருச்சி- பெரம்பலுார் மெயின் ரோட்டை இணைக்கிறது. மறைந்த தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.,மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளை கிராமச் சாலையில் நிறுவ அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர் முயற்சிக்கின்றனர்.உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பொதுச் சாலைகள், நடைபாதைகளில் எவ்வித சிலைகள் அல்லது எவ்வித கட்டுமானங்களுக்கும் அனுமதியளிக்க முடியாது என தமிழக அரசு 2017 ல் அரசாணை வெளியிட்டது.மணியாங்குறிச்சியில் சிலைகள் அமைப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும். அருகிலுள்ள ரேஷன் கடைக்கு மக்கள் செல்ல மற்றும் கோயில் திருவிழாவின்போது பக்தர்கள் கூடும்போது இடையூறு ஏற்படும். பொதுச் சாலையில் சிலைகளை நிறுவ அடித்தள கட்டுமானப் பணி நடக்கிறது.

அனுமதியற்ற கட்டுமானத்தை அகற்ற வேண்டும். சிலைகளை நிறுவ அனுமதியளிக்கக்கூடாது என திருச்சி கலெக்டர், எஸ்.பி.,க்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராமச்சந்திரன் மனு செய்தார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு: கலெக்டர், எஸ்.பி.,சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அளித்து விளக்கம் கோர வேண்டும். மனுவை பரிசீலித்து 6 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X