சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் முன்விரோதத்தில் இருவர் கொலை: அரக்கோணம் அருகே நான்கு பேர் கைது

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
அரக்கோணம்: அரக்கோணம் அருகே, தேர்தல் முன்விரோதத்தால் இருவர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சித்தாம்படி அருகே, பெருமாள் ராஜபேட்டையில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு சோகனூ?ரை சேர்ந்த சூர்யா, அர்ஜூன், சவுந்திரராஜன், மதன் ஆகியோர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த பெருமாள்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே, தேர்தல் முன்விரோதத்தால் இருவர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சித்தாம்படி அருகே, பெருமாள் ராஜபேட்டையில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு சோகனூ?ரை சேர்ந்த சூர்யா, அர்ஜூன், சவுந்திரராஜன், மதன் ஆகியோர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த பெருமாள் ராஜபேட்டையை சேர்ந்த, 10 பேரும் மது குடித்தனர். அப்போது, அவர்களுக்குள் தேர்தல் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கத்தி, பீர் பாட்டிலால் குத்திக் கொண்டனர். இதில், சோகனூரை சேர்ந்த சூர்யா, 24, அர்ஜூன், 21, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சவுந்தரராஜன், 26, மதன், 27, ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள், திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சோகனூரை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், பெருமாள் ராஜபேட்டை கிராமத்தில் புகுந்து டிராக்டர் மற்றும் 100 நெல் மூட்டைகளுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு, இரு கிராமத்தினருக்கு மோதல் ஏற்பட்டது. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று மாலை, 4:00 மணி வரை சோகனூர் கிராமத்தினர் சோகனூர் கூட்டு சாலை மற்றும் குருவராஜபேட்டை- திருத்தணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை, எஸ்.பி., சிவக்குமாரிடம், சோகனூரை சேர்ந்தவர்கள் கூறுகையில், 'அரக்கோணம் தொகுதியில், வி.சி., கட்சிக்கு ஆதரவாக சூர்யா, அர்ஜூன் தேர்தல் பிரசாரம் செய்தனர். அவர்களை பெருமாள் ராஜபேட்டையை சேர்ந்த, பா.ம.க.,வினர் தடுத்தனர். இதனால், அவர்களுக்குள் தேர்தல் முன்விரோதம் ஏற்பட்டது. இதனால், அவர்களை கொலை செய்து விட்டனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை, சடலத்தை வாங்க மாட்டோம், சாலை மறியலை கை விட மாட்டோம்' எனக்கூறினர். அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெருமாள்ராஜபேட்டையை சேர்ந்த, மதன், 37, அஜித், 24, தனசேகரன், 28, ஜெயராமன், 30, ஆகியோரை நேற்று கைது செய்தனர். ஆனாலும், சாலை மறியலை கைவிட, சோகனூர் கிராமத்தினர் மறுத்து விட்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X