சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரில் தீ : மனைவி கண் முன் கணவர் பலி

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 09, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் அருகே ரோட்டில் சென்று கொண்டிருந்த காரில் ஏற்பட்ட தீ விபத்தில், மனைவி கண்முன், கணவர் உடல்கருகி பரிதாபமாக இறந்தார்.ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த ரங்கராஜ், 62. இவர் உடல்நலம் சரியில்லாமல், கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று இரவு, மருத்துவமனையில் இருந்து ரங்கராஜை அழைத்து கொண்டு, அவரது மனைவி ஜோதி மற்றும் உறவினர்
காரில் தீ : மனைவி கண் முன் கணவர் பலி

திருப்பூர்: திருப்பூர் அருகே ரோட்டில் சென்று கொண்டிருந்த காரில் ஏற்பட்ட தீ விபத்தில், மனைவி கண்முன், கணவர் உடல்கருகி பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த ரங்கராஜ், 62. இவர் உடல்நலம் சரியில்லாமல், கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று இரவு, மருத்துவமனையில் இருந்து ரங்கராஜை அழைத்து கொண்டு, அவரது மனைவி ஜோதி மற்றும் உறவினர் நந்தகுமார் பெருந்துறைக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். பெருமாநல்லூர் அருகே பொரசுபாளையம் பிரிவில் காரை நிறுத்தினர். அப்போது, திடீரென காரில் இருந்து கரும் புகை வந்தது. உடனே நந்தகுமார் மற்றும் ஜோதி ஆகியோர் இறங்கினர்.
ஆனால், ரங்கராஜ் இறங்குவதுக்குள், தீ மளமளவென காரில் பிடித்து எரியத் தொடங்கியது. ரங்கராஜை மீட்க முடியவில்லை. அவர் உடல் கருகி இறந்தார். வடக்கு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இறப்பில் சந்தேகம் இருப்பதால், இருவரிடம் பெருமாநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X