கார் கவிழ்ந்து 3 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் கவிழ்ந்து 3 பேர் பலி

Added : ஏப் 09, 2021
Share
சிவகங்கை: காளையார்கோவில் அருகே கார் கவிழ்ந்து 3 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த ஆறுமுகம்(65), மதுரை, தத்தனேரியை சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி அல்லிராணி(45), மதுரை முல்லை நகரை சேர்ந்த முத்தையா என்பவரது மகன் ராஜா(52) உள்ளிட்ட 11 பேர் கார் மூலம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். காரை, அல்லிராணி மகன்

சிவகங்கை: காளையார்கோவில் அருகே கார் கவிழ்ந்து 3 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த ஆறுமுகம்(65), மதுரை, தத்தனேரியை சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி அல்லிராணி(45), மதுரை முல்லை நகரை சேர்ந்த முத்தையா என்பவரது மகன் ராஜா(52) உள்ளிட்ட 11 பேர் கார் மூலம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். காரை, அல்லிராணி மகன் பசும்பொன்(21) ஓட்டி வந்துள்ளார். காளையார்கோவில் அருகே வளைவில் திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது. இதில் ஆறுமுகம், அல்லிராணி, ராஜா ஆகியோர் உயிரிழந்தனர். பசும்பொன் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X