சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை

Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூரை அடுத்த முதலிபாளையம் சிட்கோவை சேர்ந்தவர் செல்வி, 47; பனியன் தொழிலாளி. மகன் அஸ்வின், 19, மகள் அகல்யா, 17. பிளஸ்2 படித்து வந்தனர். கடந்த ஆண்டு அக்., மாதம் கணவர் ராகவன் இறந்தார். அவரின் பிரிவால் குடும்பத்தினர் மனமுடைந்து இருந்து வந்தனர்.இச்சூழலில், நேற்று (ஏப்.,08)
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை

திருப்பூர் : திருப்பூரில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை அடுத்த முதலிபாளையம் சிட்கோவை சேர்ந்தவர் செல்வி, 47; பனியன் தொழிலாளி. மகன் அஸ்வின், 19, மகள் அகல்யா, 17. பிளஸ்2 படித்து வந்தனர். கடந்த ஆண்டு அக்., மாதம் கணவர் ராகவன் இறந்தார். அவரின் பிரிவால் குடும்பத்தினர் மனமுடைந்து இருந்து வந்தனர்.இச்சூழலில், நேற்று (ஏப்.,08) இரவு, ஊட்டியில் உள்ள தங்கை மகாலட்சுமியை தொடர்பு கொண்டு செல்வி பேசினார். அதில், மூவரும் தற்கொலை செய்வதாக தெரிவித்தார். பின், மூவரும் தூக்குமாட்டி தற்கொலை செய்தனர். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-ஏப்-202116:24:51 IST Report Abuse
Malick Raja இது போன்ற அபலைகளை கண்டறிந்து உதவுதல் அரசின் கடமைகளில் ஒன்று .. அரசு வெளிப்படுத்தினால் கூட தன்னார்வலர்கள் பார்த்துக்கொள்வார்கள் .. கீழ்த்தரமான செயல்கள் செய்யாமல் மணத்துடன் உயிர்வாழ வழியில்லாததன் விளைவில் இது நடந்திருக்கிறது
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
09-ஏப்-202114:03:31 IST Report Abuse
சீனி இந்த மாதிரி செய்திகள் மிகவும் வருத்தப்பட வைக்கிறது. இவர்கள் தோல்விக்கு சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் பொறுப்பேற்கவேண்டும், முக்கியமாக அரசியல்வாதிகள். சமுதாயத்தில் இப்படிப்பட்டவர்களுக்குதான் அரசு உதவிசெய்யவேண்டும், ஆனால் சரியான நேரத்தில் உதவி செய்வதில்லை, இறந்த பின்பு அரசியல் செய்ய ஓடுவார்கள். அதேபோல் இவர்களின் ஏழ்மை சூழ்னிலையை பயன்படுத்தி வட்டிக்குவிடும் ரெளடிகளும், அடகு காரர்களும் தான் பலன் அடைகின்றனர். கணவனை இழந்து குழந்தைகளுடன் வசிப்பவர்கள் உங்களுக்கு அருகில் யாரும் இருந்தால், முடிந்த உதவிகளை தேடி செய்யுங்கள், அவர்கள் உங்களிடம் வந்து கேட்கமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் பிச்சைகாரர்கள் இல்லை, முன்பு தன்மானத்துடம் வாழ்ந்தவர்களா இருக்கலாம், அதனால் உதவிகேட்க மனம் வராது...
Rate this:
Saravanan AE - Navi Mumbai,இந்தியா
10-ஏப்-202115:16:15 IST Report Abuse
Saravanan AEநம் சமூகத்தில் படிக்கும் மாணவர்களை பகுதி நேர வேலைக்கனுப்புவதை அவமானமாகக் கருதுவதை நிறுத்த வேண்டும். மகன் 19 வயது, அவனால் நிச்சயம் சம்பாதிக்க முடிந்திருக்கும். குடும்பச் சுமையும் குறைந்திருக்கும். கிராமப்புறங்களில் வேலை உறுதி திட்டம் இருப்பது போல நகர்ப்புறங்களில் தகுதியானவர்களுக்கு இந்த உதவிகள் அளிக்கப்பட வேண்டும். ஆழ்ந்த இரங்கல்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X