பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக தேர்தலில் ஆண்களை விட அதிகம் வாக்களித்த பெண்கள்

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்துள்ளனர். 9 மாவட்டங்களில் மட்டுமே ஆண்கள் அதிகம் வாக்களித்துள்ளனர்.தமிழக சட்டசபைத் தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். கடந்த 7ம் தேதி 72.78 சதவீதம் பதிவானதாக கூறப்பட்ட நிலையில், இந்த புதிய தரவுகளை
TamilnaduElections, Women, Voters, Poll, தமிழகம், சட்டசபை தேர்தல், பெண்கள், வாக்காளர்கள்

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்துள்ளனர். 9 மாவட்டங்களில் மட்டுமே ஆண்கள் அதிகம் வாக்களித்துள்ளனர்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். கடந்த 7ம் தேதி 72.78 சதவீதம் பதிவானதாக கூறப்பட்ட நிலையில், இந்த புதிய தரவுகளை அதிகாரப்பூர்வமாக அவர் வெளியிட்டுள்ளார். மேலும், மொத்தமுள்ள 6.28 கோடி வாக்காளர்களில் 4.57 கோடி பேர் மட்டுமே வாக்களித்துள்ளதாகவும், 1.71 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news


வாக்களித்த 4.57 கோடி பேரில் 2.31 கோடிப் பெண் வாக்காளர்கள் என்றும், 2.26 கோடி ஆண் வாக்காளர்கள், 1,419 மூன்றாம் பாலினத்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பார்க்கையில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், சேலம், திருப்பூர், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் மட்டுமே ஆண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narasimhan - Manama,பஹ்ரைன்
10-ஏப்-202113:02:00 IST Report Abuse
Narasimhan ஆட்சிக்கு வந்தால் சரக்கு இலவசம் என்று கூறியிருந்தால் கூடியிருக்கும்
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
10-ஏப்-202108:23:08 IST Report Abuse
Jayvee ஆண்டிராஜாவின் கைங்கர்யம்
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
10-ஏப்-202107:47:07 IST Report Abuse
spr அண்மையில் (2019) வெளியிடப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, இந்தியாவில் தற்பொழுது உள்ள பதிவு செய்யப் பெற்ற மொத்த அரசியல் கட்சிகள் 2698. அவற்றில் 8 மட்டுமே தேசிய கட்சிகள் 52 கட்சிகள் மாநிலக்கட்சிகள் இதர 2638 கட்சிகளும் அங்கீகாரம் பெறாத கட்சிகளே. காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எந்த ஒரு பெரிய கட்சியும் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக மஹான் நேரு செய்த “நல்ல செயலே” இத்தனை கட்சிகள் உருவானது என்பது மறுக்க முடியாத உண்மை. இது ஒரு போலியான சுதந்திரம். இல்லையேல் அமெரிக்கா போல இரண்டு கட்சி ஆட்சி முறை இந்தியாவிலும் வந்திருக்கும் ஒரு கட்சி தேசீயக் கட்சி எனும்அங்கீகாரம் பெறக் கீழ்க்கண்ட மூன்றில் ஏதேனுமொன்றை உடையதாக இருக்க வேண்டும். 1. ஒரு கட்சி குறைந்தது மூன்று மாநிலங்களிலிருந்து பாராளுமன்றத்திற்கு 2 விழுக்காடு இடங்களை வென்றிருக்க வேண்டும். அல்லது 2. பாராளுமன்றத்திற்கோ அல்லது சட்ட மன்றத்திற்கோ நடத்தப்படும் பொதுத் தேர்தலில், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில், , நான்கு பாராளுமன்ற உறுப்பினர் இடம் உள்ளதாக இருப்பதோடு, அந்தக் கட்சிக்கு 6 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியிருக்க வேண்டும். அல்லது 3. ஒரு கட்சி குறைந்தது நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த மூன்று நிபந்தனைகளுக்கும் ஏற்புடைய கட்சிகள் மட்டுமே தேசீயக் கட்சிகளாகத் தகுதியுடையவை என்றிருந்தாலும் கூட ஓரிரு கட்சிகளே தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கும். பிரச்சினை குறைவாக இருந்திருக்கும். மீதியுள்ள 2638 அங்கீகாரம் பெறாத கட்சிகளே நாட்டில் பல தேவையற்ற போராட்டங்களை, பிரச்சினைகளை உருவக்குகின்றன. மக்களே இவர்களை ஒதுக்கினலொழிய வேறு விமோசனமில்லை. . இப்படிச் சொன்னாலும் மகளிருக்கு ஏற்படும் அண்மைக்கால கொடுமைகளைப் பார்க்கையில், பல திறமையுள்ள பெண்கள் அவர்களின் குடும்ப ஆண்மக்களின் பிநாமியாகச் செயலாற்ற வேண்டிய நிலையைப் பார்க்கையில், இந்தியாவிலுள்ள அறிவார்ந்த (நிர்மலா சீதாராமன் தொடங்கி, ராதிகா, குஷ்பு உள்ளிட்ட) நிர்வாகத்திறனுள்ள நல்ல பேச்சாற்றலுள்ள பெண்கள் அனைவரும் தங்களது நிகழ்கால கட்சிகளின் பிடியிலிருந்து வெளிவந்து, ஒன்றிணைந்து, புதியதாக ஆண்களே இல்லாத “அகில இந்திய மகளிர் கட்சி” (அ இ ம க) என்ற ஒன்றைத் தொடங்கி தேர்தலைச் சந்திக்க வேண்டும். தமிழகத்தில் மட்டுமே மொத்தம் 6 கோடியே 26,74,446 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 3,08,38,473 பேரும், பெண் வாக்காளர்கள் 3.18,28,727 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7246 பேர் இடம் பெற்றுள்ளனர். இது நடக்க இதுவே நல்ல நேரம். அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவர் பொதுவாக நல்லாட்சி தருவார்கள் பெண்களுக்கே உரிய (பொறாமை) கண்காணிப்பு காரணமாக பிறர் ஊழல் செய்யவும் விடமாட்டார்கள் ஆனால் பழமொழி சொல்லுவது “பெண்களால் ஒன்றிணைந்து ஒரு செயல் செய்ய இயலாது” என்பதே. என்ன செய்யலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X