பொது செய்தி

இந்தியா

காசி கோவில் பகுதியில் தொல்பொருள் ஆய்வு - டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (78)
Share
Advertisement
வாரணாசி : வாரணாசியில், விஸ்வ நாதர் கோவில் - ஞான்வாபி மசூதி அமைந்துள்ள வளாகத்தில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதை வரவேற்று பலரும் டிரெண்ட் செய்தனர்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர், வி.எஸ்.ரஸ்தோகி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
KashiMathuraisours, Mosque, Aurangzeb, KashiVishwanath, Mughal, காசி கோவில், தொல்பொருள் ஆய்வு, டுவிட்டர், டிரெண்டிங்

வாரணாசி : வாரணாசியில், விஸ்வ நாதர் கோவில் - ஞான்வாபி மசூதி அமைந்துள்ள வளாகத்தில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதை வரவேற்று பலரும் டிரெண்ட் செய்தனர்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர், வி.எஸ்.ரஸ்தோகி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: வாரணாசியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய காசி விஸ்வநாதர் கோவில், முகலாய மன்னர் அவுரங்கசீபால் இடித்து தள்ளப்பட்டது. அங்கு, மசூதி கட்டப்பட்டுள்ளது. இது வரலாற்றுப் பூர்வமான உண்மை.

முகலாயர் ஆட்சி முடிந்த பின்,மசூதிக்கு அருகே, விஸ்வநாதர் கோவில் புதிதாக கட்டப்பட்டது. அதனால், காசி விஸ்வநாதர் கோவில், ஞான்வாபி மசூதி வளாகத்தை, ஹிந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த வளாகத்தில், தொல்பொருள் ஆய்வு நடத்தினால், விஸ்வநாதர் கோவில் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கும். அந்த வளாகத்தில் தான், கோவிலை இடிக்கும் போது இருந்த, விஸ்வநாதர் லிங்கமும் புதைக்கப்பட்டுள்ளது. என கூறப்பட்டு இருந்தது.


latest tamil newsதொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள, மசூதி நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பல ஆண்டுகளாக, இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில், விஸ்வநாதர் கோவில் மற்றும் மசூதி வளாகத்தில், தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்து, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்கான செலவை, மாநில அரசு ஏற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதை வரவேற்று பலரும் சமூகவலைதளமான டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #KashiMathuraisours, Mosque, Aurangzeb, #KashiVishwanath, #Mughal உள்ளிட்ட பல ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின. இந்த ஹேஷ்டாக்கில் பதிவிட்ட சிலரின் கருத்துக்களை இங்கு பார்ப்போம்...
* நமது பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்கான நேரம். காசியை மீட்டெடுப்பதற்கான நேரம்.
* இதில் ஆராய்ச்சி செய்ய ஒன்றுமில்லை. கோவில்களை இடித்து முகாலாயர்கள் மசூதியை கட்டினார்கள் என்பது வரலாற்று சான்று. இன்றும் காசி பகுதியில் தற்போது உள்ள மசூதிகளின் பின்னணியில் கோயில் தூண்கள் இருப்பதை பார்க்கலாம்.
* காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் ஞான்வாபி மசூதி வளாகம் தொடர்பான பிரச்னையில் தொல்பொருள் துறையின் குழுவிடம் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் இருந்தன என்பதற்கான ஆதாரத்துடன் உண்மை விரைவில் வெளிவரும் என்று நம்புகிறேன்.


latest tamil news* 500 ஆண்டு போராட்டத்திற்கு பின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி கிடைத்தது. இத்தனை ஆண்டுகளில் ஒரு போதும் நாம் பின்வாங்கவில்லை. இப்போது காசி விஸ்வநாதர் கோவில் - ஞான்வாபி மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய கோர்ட் அனுமதி அளித்துள்ளது. ஞான்வாபி மசூதியின் கீழ் இந்து கோயில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். நிச்சயம் நீதி வெல்லும்.
* கோயில்களில் நந்தி எப்போதும் சிவலிங்கத்தை நோக்கி தனது முகத்தை வைத்திருப்பார். ஆனால் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள நந்தி ஞான்வாபி மசூதியை எதிர்நோக்கி இருப்பார். நந்தி வாசலைப் பார்க்கும்போது, ​​தனது கடவுள் தோன்றுவார் என்று காத்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. இன்றைய உத்தரவு நம்பிக்கையைத் தருகிறது. ஹர ஹர மகாதேவ்.
இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக முகாலாயர்கள் இந்திய கோயில்களை களவாடியது, இடித்தது, அவுரங்கசீப் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்து தான் ஞான்வாபி மசூதியை கட்டினார் என்பதை பலரும் சுட்டிக்காட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-ஏப்-202112:44:51 IST Report Abuse
Malick Raja கொரோனா 21 அடுத்த ட்ரெண்ட்ரிங் .. ஆக கொரோனா நீங்கினால் சரியாக வராது என்பது சிலரின் விருப்பமாக இருக்கலாம் ..
Rate this:
Cancel
mei - கடற்கரை நகரம்,மயோட்
10-ஏப்-202109:08:11 IST Report Abuse
mei இப்படியே பழைய மசூதிகளையெல்லாம் இடித்தால் நிலத்துக்குள்ளே இந்து கோவில்களை காணலாம் . முகலாய ஊடுருவல் வெளிப்படும். இந்துக்கள் கண்களை திறக்கவேண்டும் . எந்த முகவரியும் இல்லாத, தனக்கென்று அடையாளம் இல்லாத சில இந்துக்கள் இங்கே பொறுப்பற்று பதிவிடுகின்றனர். இவர்களுக்கு சாப்பாடும் பெட்ரோலும் கிடைத்தால் போதும். பாருங்கள், முஸ்லிம்களை கிறிஸ்தவர்களை 200 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்களே தம்மை நிலைநிறுத்தி அடையாளத்தை காப்பதற்கு எவ்வளவு பாடு படுகின்றனர், ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்துக்களோ அது பற்றி கவலையின்றி தமது இருப்பினை தொலைத்துவிட்டு அறிவிலிகளாய் இருக்கின்றனர்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
10-ஏப்-202115:11:12 IST Report Abuse
 Muruga Velஒட்டு மொத்த இரான் பதிநேழு வருடங்களில் இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறியது ...அல்ஜீரியா போன்ற நாடுகளிலும் இதே நிலைமை ... இருநூறு ஆண்டுகள் முகலாயர் ஆட்சி நடந்தாலும் இந்து மதம் அழிந்து விட வில்லை ......
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
10-ஏப்-202108:45:16 IST Report Abuse
S Bala கோவில் கட்டும் முன்பு வெறும் தரையாக இருந்தது என்பதால் அனைத்தையும் இடித்து மீண்டும் தரைமட்டம் ஆக்கலாம். கோவில் இருந்தது சரித்திரம் என்றால் அதை இடித்து மசூதி கட்டப்பட்டதும் சரித்திரம்தான். வீணாக இப்போது மசூதியை இடித்து கோவில் கட்டினால் அதுவும் சரித்திரமாகும். இப்படியே ஒவ்வொன்றாக இடிப்பதும் கட்டுவதும் யாருக்கும் பயனற்ற வேலை.
Rate this:
Baskar Selvaraj - 630001,இந்தியா
10-ஏப்-202110:42:13 IST Report Abuse
Baskar Selvarajஅறிவு கொழுந்து........ போ போ ......
Rate this:
veeratamilan - chennai,இந்தியா
10-ஏப்-202111:22:54 IST Report Abuse
veeratamilanஇடித்து தள்ளப்பட்டது சுமார் 3300 பிரபல கோயில்கள், ஹிந்துக்களால் கேட்கப்படுவது மிக முக்கியத் தலங்களான காசி, மதுரா, அயோத்தி மட்டுமே. அதையும் இஸ்லாமியர்களுக்கு விட்டு கொடுக்க மனமில்லை என்றால் எல்லா கோயில்களையும் மீட்டெடுப்பதில் தவறில்லை. நாம் அவர்கள் சந்ததியை மன்னித்ததே பெருந்தன்மை....
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்அழகாக அருமையாக கட்டப்பட்ட உங்கள் வீட்டை இடித்து விட்டு அந்த நிலத்தில் நான் எனக்கு தகுந்தபடி வீட்டை கட்டி உட்கார்ந்து கொண்டால் போராடுவீர்களா, சரித்திரம் என்று சொல்லி பேசாமல் இருப்பீர்களா....
Rate this:
agni - chennai,இந்தியா
10-ஏப்-202116:40:01 IST Report Abuse
agniகோவில்களை இடிச்சு கட்டியவைகளும்,கட்டியவர்களும் சரித்திரமாத்தான் தெரிவாங்க என்ன பண்றது 60 வருசமா இருந்த கவர்மென்ட் ஸ்கூல நமக்கு முகமது கஜினி 17 முறை படையெடுத்து வென்றார் அப்படி தானே பெருமையாக வரலாறுல சொல்ல கொடுத்தாங்க ,நாம் அவனது பெரும் படையை 16 முறை விரட்டியடித்ததை பெருமையாக ஏன் சொல்லி தரவில்லை.பெரிய கொள்ளை படையின் திடீர்படையெடுப்பை கொலைவெறி தாக்குதலை சமாளித்து கோவிலை அழிக்க வந்தவனை 16 முறை சண்டையிட்டு விரட்டியடித்தது சாதாரண விசயமா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X