சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

சென்னையின் மதிப்பு குறைகிறது!

Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னையின் மதிப்பு குறைகிறது!மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபைத் தேர்தலில், தலைநகர் சென்னையில், 16.6 லட்சம் பேர் ஓட்டுப் போடவில்லையாம்.'சென்னையில் பெரும்பாலும் படித்தோர், விபரம் அறிந்தோர் தான் இருக்கின்றனர்' என, தமிழகத்தின் பிற பகுதி மக்கள் நினைத்துக் கொண்டிருந்தது, தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.இதற்கு, கொரோனா நோய்


சென்னையின் மதிப்பு குறைகிறது!மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபைத் தேர்தலில், தலைநகர் சென்னையில், 16.6 லட்சம் பேர் ஓட்டுப் போடவில்லையாம்.'சென்னையில் பெரும்பாலும் படித்தோர், விபரம் அறிந்தோர் தான் இருக்கின்றனர்' என, தமிழகத்தின் பிற பகுதி மக்கள் நினைத்துக் கொண்டிருந்தது, தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.இதற்கு, கொரோனா நோய் பரவலை காரணம் கூற முடியாது. சென்னைவாசிகள், சமூக இடைவெளியை பின்பற்றித் தான் வாழ்கின்றனரா என்ன?தேர்தல் ஆணையம், சென்னை மீது தீவிர கவனம் செலுத்த வேண்டும். இந்த தேர்தல் மட்டுமின்றி, இதற்கு முன் நடந்த தேர்தல்களிலும், அங்கு ஓட்டுப்பதிவு சதவீதம் மிகக் குறைந்தே காணப்படுகிறது.இந்த தேர்தலில், துறைமுகம் தொகுதியில், வாக்காளர் அட்டை இருந்தும், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வைத்திருந்த பட்டியலில் பெயர் இல்லாததால், 7,000 பேர் ஓட்டளிக்காமல் திரும்பிச் சென்றுள்ளனர்;பலருக்கு, 'பூத் ஸ்லிப்' கொடுக்கப்படவில்லை.
இதன் மூலம், தேர்தலுக்கு முன் எடுக்கப்படும், 'சென்சஸ்' சென்னையில் சரியாக எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. வரும் தேர்தல்களில், இது போன்ற குறைகள் தவிர்க்கப்பட வேண்டும்.சென்னை மக்களுக்கு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லையோ எனத் தோன்றுகிறது. அதனால், ஓட்டுப்போடாத நபரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்; அரசு வழங்கும் சலுகை அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.எந்த தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நிகழ்கிறதோ, அப்போது தான், பூரண ஜனநாயகம் என்ற அற்புத நிலையை அடைய முடியும்.


நாமெல்லாம்முட்டாளா

?

டாக்டர் எஸ்.சந்தானம், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: நானும், பல தேர்தல்களை கண்டுள்ளேன்... ஆனால், இந்த தேர்தல் அளவிற்கு, வேறு எப்போதும், மக்கள் நலனில் அக்கறையே இல்லாமல், அரசியல்வாதிகள் செயல்பட்டதே இல்லை.தேர்தல் பிரசாரத்தில், மக்களுக்கு இம்சையாக இருப்பது, 'அன்பார்ந்த வாக்காள பெருமக்களே...' என அலறும், 'ஸ்பீக்கர்' சத்தம் தான். இந்த தேர்தலில், அதோடு சேர்த்து கொரோனா நோயையும், அரசியல்வாதிகள் பரப்பி உள்ளனர்.இந்த இரண்டு மாதத்தில், எத்தனையோ பிரசாரக் கூட்டங்கள் நடந்து உள்ளன; அங்கு எல்லாம் சமூக இடைவெளியே இல்லை.தேர்தல் அறிவிப்புக்கு முன் வரை, தமிழகம் எங்கும் பின்பற்றப்பட்டு வந்த கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அதன் பின், காற்றில் பறக்க விடப்பட்டன.
இந்த கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர், போலீசார் உள்ளிட்டோர் அரும்பாடு பட்டனர். அவர்களின் அர்ப்பணிப்பு பணி, இந்த தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கேலிக்கு உரியதாக மாற்றப்பட்டது. கொரோனா பரவல், ஊரடங்கு என பாதிக்கப்பட்டிருந்த மக்களை, இந்த ஏப்ரலில் முட்டாளாக்கி விட்டனர், அரசியல்வாதிகள்!


எல்லாருக்கும் நன்றிங்க!ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வன்முறை, ஓட்டு இயந்திரம் துாக்கிச் செல்லுதல் போன்ற அசம் பாவிதம் ஏதும் இன்றி, தமிழக சட்டசபைத் தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள, 234 தொகுதிகளிலும், 700 கோடி ரூபாய் செலவில், கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை வீசும் இவ்வேளையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப் பட்டு, தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.துணை ராணுவ வீரர், போலீசார் என, 1.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் பணியில், 4.50 லட்சம்
ஊழியர்கள் ஈடுபட்டனர். மொத்தமுள்ள, 88 ஆயிரத்து, 937 ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜனநாயகத்தை காப்பதற்காக செயல்பட்ட, தேர்தல் ஆணையத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.இத்தேர்தலில் பணியாற்றிய ஊழியர், ஆசிரியர், போலீசார் உள்ளிட்டோருக்கும், அரசியல் கட்சிகளுக்கும், ஓட்டு அளித்த வாக்காளர் அனைவருக்கும் நன்றிகள்!


காங்கிரசின் கண்ணாமூச்சி ஆட்டம்!வி.ஹெச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கேரளாவை ஆளும், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு, மாநிலத்தின் சொத்தை, கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விற்க திட்டமிடுகிறது' என, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.-மத்தியில் உள்ள, மோடி அரசு போல, கேரள மார்க்சிஸ்ட் அரசும், அம்மாநிலத்தின் வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விலை பேசி
வருகிறது.'கம்யூனிச கொள்கை மீது உறுதிப் பிரமாணம் எடுத்த கேரளா இடதுசாரி அரசு, 'பாசிஸ்ட்' கலாசாரத்தின் விளிம்பில் நிற்கிறது. 'கம்யூ., ஆட்சியில் வன்முறை, அடக்குமுறை, ஊழல் போன்றவை தலைவிரித்தாடுகின்றன. இந்த அரசு, கொலையாளிகளை பாதுகாக்கிறது' எனவும், போட்டுத் தாக்கியுள்ளார் பிரியங்கா.கம்யூ., ஆட்சி முறைபற்றி, காங்கிரசுக்கு புரிதல் வந்துள்ளது என்பது, உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது.நம் நாட்டில், ஓரிரு மாநிலங்களில் தான், கம்யூ., கட்சி உயிருடன் இருக்கிறது; விரைவில், அதற்கும் முடிவு கிடைத்துவிடும். எல்லாம் சரி... அதே காங்கிரஸ், தமிழகத்தில், கம்யூ., உடன் கூட்டணி அமைத்துள்ள கொடுமையை என்னவென்று சொல்வது?தேசிய கட்சியான காங்கிரஸ், மாநிலத்திற்கு ஒரு கொள்கையை பின்பற்றுவது, சரியானது அல்ல.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundaram - CHENNAI,இந்தியா
10-ஏப்-202116:01:20 IST Report Abuse
sundaram இது உங்கள் இடம் என்ற பிரிவிற்கு எனது கடிதம்: தற்போது ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடை பெற்று வருகிறது. இவற்றில் நான்கு மாநிலங்களில் தேர்தல் முழுமையாக முடிந்து விட்டது. இந்த நான்கு மாநிலங்களில் மொத்த தொகுதிகள் : 530. இவற்றில் அசாம் மாநிலம் தவிர மற்ற மாநிலங்களில் (கேரளா,தமிழ்நாடு,புதுச்சேரி) ஒரே கட்டமாகவும், அசாமில் மூன்று கட்டங்களாகவும் நடந்த தேர்தல் ஏப்ரல் 6ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. மேற்கு வங்காளத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதால் இந்த நான்கு மாநில தேர்தல் ஓட்டுக்கள் எண்ணப்படாமல் உள்ளன. தேர்தல் கமிஷன் முன்பே ஆலோசனை செய்து இந்த நான்கு மாநில தேர்தல்களை 6ம் தேதி முடித்து 10ம் தேதிக்குள் முடிவு சொன்ன பிறகு மேற்கு வங்காள தேர்தலை அறிவித்து இருக்கலாம் என்பது எனது கருத்து. மேற்கு வங்காளத்தில் பதட்டமான தொகுதிகள் அதிகமாக உள்ளதால் எட்டு கட்டங்களாக தேர்தல் நடை பெறுகிறது. இந்த விஷயத்தால் மற்ற மாநிலங்களிலும் தேர்தல் முடிவு தாமதமாகிறது. தேர்தல் கமிஷன் கண்டிப்பாக இது போன்ற விஷயங்களை ஆராய்ந்து ஒரு முடிவு எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டதென்று நான் நினைக்கிறேன். தேர்தல் நாளுக்கும் முடிவு அறிவிக்கும் நாளுக்கும் அதிக இடைவெளி தவிர்க்கப்படவேண்டும் என்பது என் கருத்து.
Rate this:
Cancel
sundaram - CHENNAI,இந்தியா
10-ஏப்-202115:35:26 IST Report Abuse
sundaram எனது பதிவு : இது உங்கள் இடம் "மால்" களில் பொருட்கள் வாங்கும் போது கவனம் தேவை. நான் சென்னை அசோக் நகரில் வசிக்கிறேன்.இங்கே ஒரு சூப்பர் மார்க்கெட்டில் (சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது) வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி வருவேன். சென்ற வாரத்தில் இவ்வாறு வாங்கி வந்தபோது இரண்டு அனுபவங்கள் ஏற்பட்டன. 1. நான் உளுத்தம் பருப்பு வாங்கினேன்.(100gm-14 ரூபாய்). பில் போடும் போது காபி பவுடர் என்று போட்டு விட்டனர் (விலை 71 ரூபாய்). வீட்டிற்கு டெலிவரி செய்தபோது சரிபார்த்ததில் தவறு தெரிந்தது. டெலிவரி செய்தவர் கடைக்கு சென்று பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு சொல்லிவிட்டார். மறுநாள் கடைக்கு சென்று, அன்று வேறு சில பொருட்கள் வாங்கி சரிசெய்து வந்தேன். 2. என்னுடைய மொத்த பில் ரூபாய் 347. கார்டு கொடுத்தபோது 370 என்று போட்டு பில்லும் கார்டு ரசீதும் கொடுத்தனர்.வீட்டிற்கு வந்து பார்த்த போது தான் இந்த தவறு தெரிந்தது. மறுபடியும் கடைக்கு சென்று கேட்டதற்கு, மன்னிப்பு தெரிவித்து விட்டு 23 ரூபாய் கொடுத்துவிட்டார்கள். வாசகர்களே : கடையை விட்டு வருமுன் பில்லை ஒரு முறை பாருங்கள். நீங்கள் வாங்கியவற்றுக்குத்தான் பில் போட்டிருக்கிறார்களா என்று ஒரு முறை சரி பார்த்து கொள்ளுங்கள். இதே போல் வாங்கிய பில் தொகையும் கார்டில் வரும் தொகையும் ஒன்றாக இருக்கிறதா என்று ஒரு முறை சரிபார்த்து கொள்வது நன்மை பயக்கும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-ஏப்-202106:30:27 IST Report Abuse
D.Ambujavalli இந்த, பட்டியலில் இல்லாத வாக்காளர்கள் பலர் ‘விலைக்கு’ வாங்க முடியாதவர்கள், என்று திட்டமிட்டே பெயர்களை நீக்கியிருக்கலாம் இன்னொரு ‘தர்பார்’ மக்கள், வாக்காளர்கள் சேர்ந்து நடத்தும் நிலைதான் இதனால் எந்தக் கட்சிக்கு எவ்வளவு ஓட்டுகள் ஆதாயமோ ? வெறும் பதினைந்தைப் பெரிதாக்குபவர்கள், இதில் மட்டும் மௌனம் காப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X