சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

தேங்காயில் கிடைக்கிறது 'தங்கம்!'

Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தேங்காய் நார் கழிவை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவது பற்றி, ஈரோடை சேர்ந்த, இயந்திரவியல் பொறியாளர் செந்தில்: தேங்காயில் இருந்து தேங்காயை உரித்த பின் கிடைக்கும் எல்லாவற்றையும் கழிவு என்று தான் கூறுகின்றனர். தேங்காயை மூடியிருக்கும் நார்களை உரித்து, கயிறு திரிக்கின்றனர். அப்படி கயிறு திரிக்கும் போது உதிரும் கழிவு தான், இப்போது, தேங்காயின் தங்கம் என
சொல்கிறார்கள்

தேங்காய் நார் கழிவை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவது பற்றி, ஈரோடை சேர்ந்த, இயந்திரவியல் பொறியாளர் செந்தில்: தேங்காயில் இருந்து தேங்காயை உரித்த பின் கிடைக்கும் எல்லாவற்றையும் கழிவு என்று தான் கூறுகின்றனர். தேங்காயை மூடியிருக்கும் நார்களை உரித்து, கயிறு திரிக்கின்றனர். அப்படி கயிறு திரிக்கும் போது உதிரும் கழிவு தான், இப்போது, தேங்காயின் தங்கம் என போற்றப்படுகிறது. தேங்காயை யாரும் ஏற்றுமதி செய்வதில்லை; இந்த கழிவைத் தான் ஏற்றுமதி செய்கின்றனர்.கடந்த, 2000ம் ஆண்டு வரை, தேங்காய் கழிவிலிருந்து நார் உரிக்கப்பட்ட பிறகு, கழிவை மொத்தமாக அள்ளிச் சென்று, சாலைஓரங்களில் கொட்டி எரிப்பதைத் தான் விவசாயிகள் வழக்கமாக கொண்டிருந்தனர்.அந்த காலகட்டத்தில், தேங்காய் கழிவுகளை எங்கே கொட்டுவது என தெரியாமல் விவசாயிகள் விழி பிதுங்கி நின்ற போது, 'என் தோட்டத்தில் கொட்டுங்கள்' என, கூறினேன். அந்த கழிவுகளை டிராக்டர்களில் அள்ளி வந்து, என் தோட்டத்தில் கொட்டி, ஒரு டிராக்டருக்கு, 250 ரூபாய் வேறு கொடுத்துச் சென்றனர்.அந்த கழிவுகளை வயல்களை செழுமை யாக்கும் தன்மை இருக்கிறது என்பதை, சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் ஒன்று கண்டு பிடித்து சொன்ன பிறகு, நம்மவர்கள், தேங்காய் கழிவுகளை வீணாக கொட்டி எரிப்பதில்லை; ெவளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுகின்றனர். ஆண்டு ஒன்றுக்கு, 1,200 கோடி ரூபாய் அளவுக்கு, 'காயர் பித்' எனப்படும் தேங்காய் நார்க்கழிவை, பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இதனால், அந்த கழிவு இப்போது இலவசமாக கிடைப்பதில்லை. ஒரு டிராக்டர் கழிவுக்கு, 12 ஆயிரம் ரூபாய் கட்டணம். அதை வாங்க, விவசாயிக்கு முன்பணம் கொடுக்க வேண்டும்.அந்த அளவுக்கு நிலைமை மாறி விட்டது. இந்த தொழிலுக்கு, தமிழக அரசு, 75 சதவீத மானியம் அளிக்கிறது. எனவே, தென்னை விவசாயிகளுக்கு, இந்த தேங்காய் தங்கம், அள்ள அள்ளக் குறையாத வளத்தை தந்து கொண்டிருக்கிறது.எதிர்காலத்தில் பூச்சிக் கொல்லி மருந்துகள் ெதளிக்காமல் பயிர் விளைவிக்க வேண்டும் என்றால், அது தேங்காய் நார் கழிவுகளில் இருந்து மட்டுமே சாத்தியம்.இந்த உண்மையை இப்போது தான் நாம் அறிந்துள்ளோம். தேங்காய் பயன்பாட்டிற்கு வந்த நாள் முதல், 2000 ஆண்டு வரை, தேங்காய் தங்கம் பற்றி யாரும் அறியாமல் இருந்தது வேதனை அளிக்கக் கூடியதே. எனினும், ரசாயன உரங்களை பயன்படுத்தி, அதிக விளைச்சலை பார்த்த நம் மக்கள் இன்னமும் தேங்காய் நார்க்கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்த தயக்கம் காட்டவே செய்கின்றனர்; இந்நிலை மாற வேண்டும்!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prakash - Chennai,இந்தியா
10-ஏப்-202115:14:09 IST Report Abuse
prakash எல்லோருக்கும் பயன் பெறவேண்டிய பதிவு அனைத்து விவசாயிகளுக்கும் பயணுள்ளது
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
10-ஏப்-202113:17:50 IST Report Abuse
pradeesh parthasarathy நல்ல வேலை சீமானுக்கு இந்த பேட்டி தெரிஞ்சிருந்தால் அவர் சொல்லி தான் நீங்கள் இதை கற்று கொண்டது என்று வேற பீலா விட்டிருப்பார் .... இன்னொன்று நாங்கள் பல ஆண்டு காலமாக தென்னை மரத்திற்கு இடையில் குழி வெட்டி இந்த கழிவுகளை அதில் போட்டு சிறிதளவு மண் போட்டு மூடுவோம் .. இதனால் மழை பெய்யும்போது தண்ணீர் உடனே வற்றி போகாமல் சிறிதளவு ஈரப்பதத்துடன் மேலும் கொஞ்சம் நாள் தாக்கு பிடிக்கும் ... விவசாயிகள் இம்முறையை முயற்சி செய்யலாம் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X