தமிழ்நாடு

ஒரே நாளில் 26 பேருக்கு தொற்று! பரிசோதனை செய்ய அதிகாரிகள் தீவிரம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஒரே நாளில், 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில், 394 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.பொள்ளாச்சி நகரம், தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களில், கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், வடக்கு ஒன்றியத்தில், ராமபட்டணம்,
 ஒரே நாளில் 26 பேருக்கு தொற்று! பரிசோதனை செய்ய அதிகாரிகள் தீவிரம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஒரே நாளில், 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில், 394 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.பொள்ளாச்சி நகரம், தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களில், கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், வடக்கு ஒன்றியத்தில், ராமபட்டணம், திப்பம்பட்டி பகுதியில் தலா ஒருவர், புளியம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூன்று பேர் என மொத்தம், ஐந்து பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.தெற்கு ஒன்றியத்தில் கஞ்சம்பட்டி, சீலக்காம்பட்டி, சூளேஸ்வரன்பட்டி, மாக்கினாம்பட்டி தலா ஒருவருக்கும், வஞ்சியாபுரம், பெரியாக்கவுண்டனுார், சின்னாம்பாளையம் பகுதியில் தலா, இரண்டு பேருக்கும் என மொத்தம், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 11 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி நகரம், தெற்கு, வடக்கு ஒன்றியங்களில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில், தலா, 30 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், 205 பேர், வடக்கு ஒன்றியத்தில், 91, நகரத்தில், 98 பேர் என மொத்தம், 394 பேருக்கு, கொரோனா பரிசோதனைகள், நேற்று ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தொடர்ந்து, கண்காணிப்பு செய்வதுடன், தடுப்பூசிகளும் பொதுமக்களுக்கு போடப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் விழிப்புணர்வுடன், முக கவசம், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X