அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டு போடாத 1.70 கோடி பேர்! தேர்தல் கமிஷனில் பட்டியல் தயார்

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 1.70 கோடி பேர் ஓட்டளிக்கவில்லை. அவர்களின் பட்டியலை, தேர்தல் கமிஷன் தயாரித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல், 6ம் தேதி நடந்து முடிந்தது. தமிழகத்தில், 3.09 கோடி ஆண்கள்; 3.19 கோடி பெண்கள்; 7,192 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சட்டசபை தேர்தலில், 72.81 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. அதாவது, 2.26 கோடி ஆண்கள்; 2.31 கோடி பெண்கள்; 1,419
TN election 2021, Voters, EC, Polling , ஓட்டு, தேர்தல் கமிஷன், பட்டியல், தயார்

சென்னை : தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 1.70 கோடி பேர் ஓட்டளிக்கவில்லை. அவர்களின் பட்டியலை, தேர்தல் கமிஷன் தயாரித்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல், 6ம் தேதி நடந்து முடிந்தது. தமிழகத்தில், 3.09 கோடி ஆண்கள்; 3.19 கோடி பெண்கள்; 7,192 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

சட்டசபை தேர்தலில், 72.81 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. அதாவது, 2.26 கோடி ஆண்கள்; 2.31 கோடி பெண்கள்; 1,419 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 4.57 கோடி பேர் ஓட்டளித்தனர். ஒரு கோடியே, 70 லட்சத்து, 93 ஆயிரத்து, 644 பேர் ஓட்டளிக்கவில்லை.

கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், 74.26 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. அப்போது, 4.28 கோடி வாக்காளர்கள் ஓட்டளித்தனர். கடந்த, 2016 தேர்தலை விட, இந்த தேர்தலில், 29.02 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக ஓட்டளித்துள்ளனர்.

இம்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், ஓட்டு போட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாக உள்ளது. தேர்தலில் ஓட்டுப் போட்டவர்கள் விபரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வழியே, ஓட்டளிக்காதவர்கள் விபரம், தேர்தல் கமிஷனுக்கு கிடைத்துள்ளது.

ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்ததற்கான காரணம் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், ''ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவுக்கு குறிப்பிட்ட காரணம் என, எதையும் கூற முடியாது. பல காரணங்கள் இருக்கலாம். கொரோனா முக்கிய காரணமாக இருக்கலாம் என, நினைக்கிறோம்,'' என்றார்.


பெண்கள் ஓட்டு அதிகம்


தமிழகத்தில், மொத்தம், 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட, 10 லட்சத்து, 15 ஆயிரத்து, 461 பெண் வாக்காளர்கள் அதிகம். ஓட்டு போட்டதிலும், ஆண் வாக்காளர்களை விட, ஐந்து லட்சத்து, 68 ஆயிரத்து, 580 பெண் வாக்காளர்கள் கூடுதலாக ஓட்டளித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
11-ஏப்-202113:46:30 IST Report Abuse
ocean ஓட்டுப்போடாதவர் பட்டியலை வைத்து என்ன செய்வது. நாக்கு வழிக்க கூட பயன்படாது.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
11-ஏப்-202115:12:40 IST Report Abuse
Visu Iyerஅட... நீங்க வேற.. சிலரின் பெயர் போட்டவர் பட்டியலில் இருக்கும்.. போடாதவர் பட்டியலில் கூட இருக்கும்.. என்று சொல்வது போல தெரிகிறதே......
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
11-ஏப்-202115:13:26 IST Report Abuse
Visu Iyerமோடி ஜி நிறையா ஒட்டு போடுங்க என்று ட்வீட் செய்தார்.. யாரும் கேட்கவில்லை போல.. அது சரி.. அவர் சொன்னால் யார் காதில் வாங்க போற என்று சொல்றா மாதிரி இருக்குதே.....
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
11-ஏப்-202108:08:38 IST Report Abuse
ocean இந்திய தேர்தல்கள் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமாக ஜந்தாண்டுகளுக்கொரு முறை நடத்தப்படுகிறது. இம்முறையில் சில மாற்றங்களை செய்வது அவசியம். தேர்தல்களில் நின்று வெற்றி பெரும் தலகாய்ஞ்சவன்கள் ஐந்தாண்டில் சாவகாசமாக ஊழல் பண்ணி கோடீஸ்வர நிலைக்கு மாறி விடுகிறார்கள். வாக்களிக்கும் ஏழைகள் அப்படியே இருக்கிறார்கள். தேர்தல்களை வெளிநாடுகளில் நடத்துவது போல் மூன்றாண்டுக்கு ஒரு தடவை நடத்தலாம். எம்எல்ஏ எம்பி என தனித்தனியாக தேர்தல் நடத்துவதை விட்டு மூன்றாண்டுக்கு ஒரு முறை எம்பி தேர்தலை மட்டும் நடத்தலாம். அதில் பல கட்சி எம்பிக்களுக்கு கிடைக்கும் வாக்குகளை அதே தேர்தலில் மாநில கட்சி எம்எல்ஏ வேட்பாளர்களுக்கும் தொகுதி வாரியாக பிரித்து தரப்படலாம். அந்த வாக்குகளின் அடிப்படையில் கட்சிகளை வரிசை படுத்தி ஒவ்வொரு கட்சிக்கும் எம்பி வாக்குகள் படி மூன்றாண்டு காலத்திற்குள் தரப்பட்ட வரிசைப்படி ஆட்சியை கொடுக்கலாம்.இதில் எந்த கட்சியும் ஊழல் செய்ய போதிய நேரம் கிடைக்காது. ஊழல் செய்து முடிவதற்குள் அடுத்த கட்சி ஆட்சி முறை வநது விடும்.உதாரணமாக பல மாநில கட்சிகள் எம்பி தேர்தல்களில். பெறும் வாக்குகளை தங்கள் எம்எல்ஏக்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில் அதிக வாக்குகளை பெறும் தொகுதி வாரியாக இறங்கு வரிசையில் ஐம்பது சதவீதம் வரை அதே கட்சிகளின் எம்எல்க்களுக்கு ஒதுக்கலாம் அதே கட்சியின் தொகுதி வாரியாக எம்பிக்கள் பெறும் அதிகமான வாக்குகளின் அடிப்படையில் எம்எல்ஏ பதவிகளை கணக்கிட்டு அதில் சீனியர் கட்சி ஆட்களின் யோக்யதாம்சம் கவனித்து எம்எல்ஏ பதவிகளை அளிக்கலாம். மூன்றாண்டுகளில் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் வரிசைப்படி கட்சிகளுக்கு ஆட்சியை கவர்னர் அனுமதிக்கலாம்.ஒரு மாநிலத்தில் வரிசைப்படி எம்பி வாக்குகளின் அடிப்படையில் மாநில அளவில் அதிக எம்எல்ஏ தகுதி பெறும் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு கட்சி வீதம் மூன்றாண்டு கால ஆட்சிக்கு மூன்று கட்சிகளுக்கு அவைகளுக்குள்ள எம்பி வாக்குகளின் எண்ணிக்கை வரிசைப்படி ஆட்சியை கொடுக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரே ஒரு முறை எம்பி தேர்தல் நடத்தப்படவேண்டும்.எம்எல்ஏக்களுக்கு என தனிப்பட்ட மாநில தேர்தல் தேவை இல்லை.
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
10-ஏப்-202119:53:28 IST Report Abuse
தமிழ்வேள் தேர்தல் கமிஷன் செயல்பாடுகள் அரசியல் காட்சிகளின் திருட்டு தனத்துக்கு சாதகமாக உள்ளது ....வாக்காளர் பதிவு சிறப்பு மையம் மூலம் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தேன் .பெயர் பிறந்த தேதி அனைத்தும் மிகவும் தவறாக இருந்ததால் , கார்டு வரும் முன்பே கார்டு திருத்தத்துக்கு விண்ணப்பித்தேன் ...ஆனால் வந்தது இன்னொரு அடையாள அட்டை மற்றும் புதிய பதிவு ....ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தனித்தனியாக ஒரே விலாசத்துக்கு அட்டை டிஸ்பட்ச் ..ஒரே கவரில் இருந்தால் , ஆணையத்துக்கு செலவு மிச்சம் ......இவர்களுக்கு எவன் சொலவ்து ?கடனுக்கு அவுட் சோர்சிங் மூலம் வெட்டி செலவு செய்து வேலைபார்க்கும் தேர்தல் ஆணையம் ...உறுப்படுவதற்கு ஒரே வழி ஆதார் கார்டு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாண் கார்ட் ஐ ஒருங்கிணைப்பது மட்டுமே .....பெரும்பாலான போலிகள் இரட்டை பதிவுகள் எல்லாம் ஒழிக்கப்பட்டுவிடும் ......[ ஆனால் சுடலை கதை கந்தல் .......நோ திருட்டு ஒட்டு ...கள்ள ஒட்டு ...பவுடர் டப்பாவின், டப்பா டான்ஸ் ஆடிப்போகும் ]
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X