பந்தலுார்:பந்தலுார் அருகே, தேவாலா பகுதியில் தொடர்ச்சியாக, வீடுகளை சேதப்படுத்தும் யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பந்தலுார் அருகே, தேவாலா சுற்றுவட்டார பகுதிகளில், முகாமிடும் இரண்டு யானைகள் மாலை, 6:00 மணிக்கு மேல், குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு அச்சுறுத்தி வருகின்றன. கடந்த, 8ம் தேதி இரவு முருகையா வீட்டை உடைத்தது. வீட்டினுள் இருந்த, 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.தொடர்ந்து, முணியாண்டி, தர்மலிங்கம் உள்ளிட்ட, 5 பேரின் வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. சதீஷ்குமார் என்பவரின் மளிகை கடையின் கதவை உடைத்த பொருட்களை சூறையாடி, உட்கொண்டுள்ளன.
மேலும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானைகளை விரட்டியபோது, அகல மறுத்த யானைகள் வனத்துறையினரையும், அப்பகுதி மக்களையும் தாக்க முற்பட்டன. இதனால், அப்பகுதி மக்கள் ஓட்டம் பிடித்தன. யானைகளால் மனித உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்னர், கும்கி யானைகள் உதவியுடன், அவற்றை அடர்த்தியான வனத்திற்குள் விரட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வனச்சரகர் கலைவேந்தன் கூறுகையில், '' காட்டு யானைகள் அரிசியை விரும்பி உட்கொள்கிறது. இதனால், கடை; வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. வீட்டு கதவுகளின் மீது மிளகாய் துாள் துாவ மக்களின் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் வாசனை அறிந்தால் யானை அங்கு செல்லாது. தனிக்குழுக்கள் ஏற்படுத்தி யானைகளின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் இரவில் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்,'' என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement