இந்திய மீனவர்கள் கொலை வழக்கு: இழப்பீடு 'டிபாசிட்' செய்ய உத்தரவு

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி :இந்திய மீனவர்களை, இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்ற வழக்கில், இழப்பீடு தொகையை, உச்ச நீதிமன்ற வங்கிக் கணக்கில், 'டிபாசிட்' செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த, 2012ல், கேரள கடல் பகுதியில், இத்தாலி கடற்படையைச் சேர்ந்த, 'எம்.வி., என்ரிக்கா லெக்ஸி' என்ற கப்பல் வந்தபோது, அங்கு, இரண்டு இந்திய மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களை கடல் கொள்ளையர் என
மீனவர்கள், கொலை,இழப்பீடு, 'டிபாசிட்',உத்தரவு

புதுடில்லி :இந்திய மீனவர்களை, இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்ற வழக்கில், இழப்பீடு தொகையை, உச்ச நீதிமன்ற வங்கிக் கணக்கில், 'டிபாசிட்' செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த, 2012ல், கேரள கடல் பகுதியில், இத்தாலி கடற்படையைச் சேர்ந்த, 'எம்.வி., என்ரிக்கா லெக்ஸி' என்ற கப்பல் வந்தபோது, அங்கு, இரண்டு இந்திய மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அவர்களை கடல் கொள்ளையர் என தவறாக நினைத்து, இத்தாலிய கப்பலில் இருந்த இருவர், அந்த மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
துப்பாக்கிச்சூடு, நடத்திய இத்தாலி வீரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். பின், இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.


latest tamil news



இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை முடித்து வைக்கும்படி, மத்திய அரசு, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மீனவர்களின் குடும்பத்தினரை

விசாரிக்காமல், வழக்கை முடித்து வைக்க முடியாது என்றும், மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும்உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், “இத்தாலி அரசு வழங்க இருக்கும், 10 கோடி ரூபாயை, இழப்பீடாக பெற்றுக்கொள்ள, உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்,” என்றார்.
இதையடுத்து, இத்தாலி அரசிடம் இருந்து இழப்பீடு தொகை வந்தவுடன், அந்த தொகையை, உச்ச நீதிமன்றத்தின் வங்கிக் கணக்கில், டிபாசிட் செய்யக்கோரி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தொகை, உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
15-ஏப்-202119:45:29 IST Report Abuse
K.n. Dhasarathan பணம் கிடைக்காமல் யாரையும் விடுதலை செய்ய வேண்டாம், ஏனினில் பைலில் வெளி வந்து மறுபடி வர மாட்டேன் என்று நமக்கு கடுக்காய் கொடுத்த பார்ட்டிகள் அவர்கள், ஆனால் ஒரு சந்தேகம் மத்திய அரசு வழக்கை முடித்து வைக்க நீதிமன்றம் சென்றது ஏன் ? ஏற்கனவே பல முக்கிய வழக்குகள் பெண்டிங்கில் இருக்கும்போது மத்திய அரசின் திடீர் கரிசனம் ஏனோ?
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
10-ஏப்-202121:03:49 IST Report Abuse
Kalyan Singapore உலகில் உள்ள கடற்படைகள் யாவும் நட்பு நாடுகளுக்கு செல்ல விசேஷமாக அனுமதி தேவையில்லை. அதுவும் ஆண்ட துறைமுகமும் செல்லாமல் நட்பு நாடுகளின் கடல் பகுதிகளின் பிரயாணம் செய்ய அனுமதி தேவை இல்லை. கேரளா மீனவர்கள் கப்பலை மறித்தால் அன்று அதிக மீன் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கையில் கப்பலின் குறுக்கே சென்றதாக கேள்வி . இத்தாலிய மாலுமிகள் இது கடற்கொள்லாய்க்காரர்கள் என்று தவறாக நினைத்து சுட்டுவிட்டனர் இந்தியாவின் கப்பல் கம்பெனிகளின் மாலுமிகளிடையே மீனவர்கள் தாவு செய்தனர் என்ற எண்ணம் உண்டு.
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
10-ஏப்-202120:32:57 IST Report Abuse
Pannadai Pandian இந்த இத்தாலிய மாலுமிகளுக்காக சோனியா, ராகுல் & பிரியங்கா இழப்பு தொகையை சமர்ப்பிப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X