மேற்கு வங்கத்தில் 4ம் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், 44 சட்டசபை தொகுதிகளுக்கு, இன்று நான்காம் கட்ட ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணியளவில் துவங்கியது. பிற்பகல் 1:30 மணி நிலவரப்படி 52.89 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், கடந்த மாதம், 27ல் துவங்கி, இம்மாதம், 29 வரை, எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல்
WestBengalPolls, மேற்கு வங்க சட்டசபை, தேர்தல்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், 44 சட்டசபை தொகுதிகளுக்கு, இன்று நான்காம் கட்ட ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணியளவில் துவங்கியது. பிற்பகல் 1:30 மணி நிலவரப்படி 52.89 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், கடந்த மாதம், 27ல் துவங்கி, இம்மாதம், 29 வரை, எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 44 சட்ட சபை தொகுதிகளுக்கு, நான்காம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. மொத்தம், 373 வேட்பாளர்களின் தலையெழுத்தை, ஒரு கோடியே, 15 லட்சத்து, 81 ஆயிரத்து, 22 வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.


latest tamil news



ஹவுரா, தெற்கு 24 பரகனாஸ், ஹூக்ளி, அலிபுர்துவார், கூச் பெஹார் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.இதில், கூச் பெஹார் பரபரப்பான மாவட்டமாக கருதப்படுகிறது. மொத்தமுள்ள, 15 ஆயிரத்து, 940 ஓட்டுச்சாவடிகளுக்கு, 789 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில்ஈடுபட உள்ளனர்.

இன்றைய தேர்தலில், பா.ஜ.,வைச் சேர்ந்தமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ, டோலிகஞ்ச் தொகுதியில், திரிணமுல் காங்., அமைச்சர் அருப் பிஸ்வாசை எதிர்த்து களம் காண்கிறார். திரிணமுல் காங்., பொதுச் செயலரும், மாநில அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜி, பா.ஜ.,வைச் சேர்ந்த நடிகை ஷ்ரபந்தி சாட்டர்ஜியை எதிர்த்து போட்டியிடுகிறார்.திரிணமுல் காங்.,கில் இருந்து சமீபத்தில் விலகி, பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் அமைச்சர் ரஜிப் பானர்ஜி, ஹவுராவின் டோம்ஜுர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-ஏப்-202112:32:28 IST Report Abuse
தமிழவேல் ஸ்வர்ணக்காவுக்கு ஆப்பு ரெடியாகிறதோ இல்லையோ, நமக்கு கொரோனா ஆப்பு ரெடி.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
10-ஏப்-202111:48:29 IST Report Abuse
sankaseshan வாக்குப்பதிவு எவ்வளவுக்கு எவ்வளவு கூடுகிறத தொ ஸ்வர்ணக்காவுக்கு ஆப்பு ரெடியாகிறது என்று புரியும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X