பொறுப்பற்ற சி.பி.எஸ்.இ., : பிரியங்கா சாடல்| Dinamalar

பொறுப்பற்ற சி.பி.எஸ்.இ., : பிரியங்கா சாடல்

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (27)
Share
புதுடில்லி: “கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், மாணவர்களை தேர்வு எழுத வற்புறுத்துவது, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலை காட்டுகிறது,” என, காங்., பொதுச் செயலர் பிரியங்கா, சாடி உள்ளார்.சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.கொரோனாவை சுட்டிக்காட்டி, இந்த தேர்வுகளை, 'ஆன்லைன்'

புதுடில்லி: “கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், மாணவர்களை தேர்வு எழுத வற்புறுத்துவது, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலை காட்டுகிறது,” என, காங்., பொதுச் செயலர் பிரியங்கா, சாடி உள்ளார்.



latest tamil news


சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.கொரோனாவை சுட்டிக்காட்டி, இந்த தேர்வுகளை, 'ஆன்லைன்' வாயிலாக நடத்தக்கோரி, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், இந்த விவகாரத்தில், சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தை, காங்., பொதுச் செயலர் பிரியங்கா, சாடி உள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவல், மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்த சூழலில், மாணவர்களை தேர்வு எழுத வற்புறுத்துவது, சி.பி.எஸ்.இ., போன்ற கல்வி வாரியங்களின் பொறுப்பற்ற செயலை காட்டுகிறது.இது, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, திட்டமிடப்பட்டுள்ள தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X